ZeeTV Serial Sep17: யாரோ பெத்த பிள்ளைக்கு என் மகன் அப்பானா.. கெட்டி மேளம் முதல் அண்ணா வரை..விமர்சனம்

சென்னை: கெட்டி மேளம் சீரியலில் இன்று, தியாவை தத்து எடுத்தது தெரிந்த அபிராமி யாரோ பெத்த பிள்ளைய தத்தெடுத்து ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு இருக்கான் என்று ஆவேசப்பட்டு பேச ஈஸ்வரமூர்த்தி எல்லாம் தேர்தல்ல ஜெயிக்கிற வரைக்கும் தான் அதுக்கப்புறம் துளசி அந்த குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று சொல்ல வெற்றி இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறான். அதன் பிறகு ரூமுக்கு வந்தவன் துளசியிடம் இனிமேல் நீங்க பிரச்சாரத்திற்கு போக வேண்டாம், இவ்வளவு அவமானப்பட்டு எல்லாம் இங்கு எதையும் செய்ய வேண்டாம் என்று சொல்கிறான். மறுபக்கம் திவ்யா மற்றும் மீனாட்சி ஆகியோர் ஒன்று சேர்ந்து துளசியை தோற்கடிப்பது எப்படி என திட்டமிடுகின்றனர்.

அடுத்த நாள் காலையில் வெற்றி, எழுந்து கொள்வதற்கு முன்பாக துளசி வெற்றியின் நண்பர்களுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள். வெற்றி இதைப் பார்த்து எதுக்கு மேடம் நீங்க இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க வேண்டாம் என்று சொல்ல துளசி உங்க வீட்ல எல்லாரும் என்ன அவமானப்படுத்தும் போது உங்க அப்பா மட்டும் என் மேல நம்பிக்கை வைத்து பிரச்சாரத்திற்கு கூப்பிட்டு இருக்காரு. அவர் என்னை வீட்டை விட்டு அனுப்பினாலும் பரவால்ல அவருக்காக பிரச்சாரம் செய்வேன் என்று சொல்கிறாள். அடுத்ததாக தேர்தல் நடந்து முடிய ஓட்டு எண்ணிக்கையும் தொடங்க ஈஸ்வரமூர்த்தி 25,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்க திவ்யா, மீனாட்சி ஆகியோர் அதிருப்தி அடைகின்றனர்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: அண்ணா சீரியலில் வைஜெயந்தி, சௌந்தரபாண்டியை எதற்காக நீதிமன்றத்திற்கு வந்தே என திட்டுகிறாள். அப்போது, சௌந்தரபாண்டி, நான் ஒரு திட்டத்தோடு தான் வந்து இருக்கேன். அதாவது, விருமன் யாருனே எனக்கு தெரியாதுனு சொல்ல போறேன். நான் சொல்ல போற பதிலில் சண்முகம் திக்கு முக்காடி போவான். இதனால், நீதிபதி அம்மாவே என்னை வெளியே அனுப்பிடுவாங்க என்று தனது திட்டத்தை சொல்கிறார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை உடன்குடி இதனை மறைமுகமாக வீடியோ எடுக்கிறார்.

பிறகு கோர்ட்டில் மீண்டும் விசாரணை தொடங்க சௌந்தரபாண்டி எனக்கு விருமனை தெரியவே தெரியாது என்று அடித்து சொல்கிறான். உடனே சண்முகம், உடன்குடி எடுத்த வீடியோவை ஆதாரமாக காட்ட சௌந்திரபாண்டி சிக்கி கொள்கிறார். பிறகு அவரை விசாரிக்க விருமன் கோவில் நகையை திருடியது, சண்முகம் அதை கண்டுபிடித்தது. பிறகு விருமனே தற்கொலை செய்து கொண்ட விஷயங்களை சொல்கிறார். இதையடுத்து நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைக்கப்படுகிறது. இது ஷண்முகத்துக் கிடைத்த வெற்றியாக அவனது குடும்பத்தார் கொண்டாடுகின்றனர்.

பாரிஜாதம்: பாரிஜாதம் சீரியலில் நேற்று, இசை, விஷாலின் கிட்டாரை உடைத்து விட இருவருக்கும் இடையே மோதல் வருகிறது. விஷால் இசையை திட்டியதால், இசை ஒரு பிளான் போட்டு, தனது ஸ்கூட்டர் வேலை செய்யவில்லை என சொல்கிறாள். இதைக்கேட்ட சுப்ரதா, விஷாலை அழைத்து காரில் இசையை வீட்டில் விட்டுவா என்று சொல்ல, விஷாலும் வேறு வழியே இல்லாமல், அவளை அழைத்து செல்கிறான்.ஆனால், போகும் வழியிலேயே இருவருக்கும் சண்டை வர, விஷால்,காரில் ஏதோ பிரச்சனை இறங்கி தள்ளு என சொல்லி அவளை இறக்கிவிட்டு, காரை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X