ஜீ தமிழ் சீரியல்கள் 19 செப்டம்பர் 2025: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: நேற்றைய எபிசோடில் அஞ்சலி, அப்பா வரலையா என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். துளசி இப்போ அப்பா எங்க நம்ப கூட இருக்காரு அவ தான் இறந்துட்டாரே என்று சொல்ல அஞ்சலி அவர் எப்பவும் நம்ம கூட இருக்கிறார் என்ற நினைப்புல இப்படி கேட்டுட்டேன் என சமாளிக்கிறாள். அதன் பிறகு எல்லோரும் சாப்பிட உட்கார அஞ்சலி மகேஷிடம் எப்படி Fire ஆக்சிடென்ட் ஏற்பட்டது என்று கேட்க மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக சொல்கிறான். இதைக் கேட்டு அஞ்சலி நான் ரூம்ல போய் சாப்பிடுறேன் என்று கிளம்பி செல்ல அஞ்சலி இப்படி பண்ற ஆள் இல்லையே என்று சந்தேகமடைகின்றனர்.
தொடர்ந்து துளசி வெற்றிக்கு போன் போட்டு தியா குறித்து விசாரிக்கிறாள். வெற்றி பாப்பாவை மட்டும் தான் விசாரிப்பீங்களா? உங்களுக்காக இங்கே ஒரு ஜீவன் காத்துக்கிட்டு இருக்கு.. அத பத்தி எல்லாம் விசாரிக்க மாட்டீங்களா என்று கேட்க துளசி என் நினைப்பெல்லாம் தீயா மேல தான் என்று சொல்லி போனை வைக்கிறாள். பிறகு துளசி அஞ்சலியுடன் படுத்துக் கொள்வதாக சொல்ல மகேஷ் அதிர்ச்சி அடைகிறான். பிறகு அஞ்சலியுடன் படுத்துக் கொள்ளும் துளசி சிறுவயதில் நடந்த விஷயங்களை பேச மதி ஒன்றும் புரியாமல் இருக்கிறாள்.

அண்ணா: நேற்றைய எபிசோடில் சண்முகம் கௌதமை கூண்டில் ஏற்றி விசாரணை தொடங்கிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீரா கௌதமின் ப்ரண்ட்ஸ்களை பிடித்து காருக்குள் உட்கார வைத்து காவல் இருக்க சிவபாலன் அவளுக்கு ஜூஸ் வாங்கி வந்து கொடுத்து காதல் அளப்பறைகளை செய்கிறான். இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி இறந்து போன மாலதி டீச்சரின் அண்ணன் துரையை அழைத்து வந்து வெளியே காத்திருக்கிறான்.
சண்முகம் கௌதமிடம் ஒரு போட்டோவை காட்டி இதில் இருபவர்களை தெரியுமா என்று விசாரிக்க யாரையும் தெரியாது என்று சொல்கிறான். அடுத்த போட்டோவை காட்ட அதில் கௌதம் நண்பர்களுடன் இருக்க கௌதம் எல்லாரையும் தெரியும் என்று உண்மையை ஒப்பு கொள்கிறான். நீதிமன்றம் 10 நிமிடம் இடைவேளையை அறிவிக்க வைஜெயந்தி சௌந்தரபாண்டியை சந்தித்து என்ன மாப்பிளையோட சேர்ந்திட்டு விளையாட்டு காட்டுறீங்களா? என்று கோபப்படுகிறாள். கொன்னுடுவேன் என்று மிரட்ட சௌந்தரபாண்டி இப்படியெல்லாம் பேசினா கோர்ட்டில் எல்லா உண்மையையும் சொல்லிடுவேன். உங்க புருஷன் பண்ண தவறுகளில் உங்களுக்கும் பங்கு இருக்கு என்று எச்சரிக்கிறார். சிவனாண்டி வைஜெயந்தியை சமாதானம் செய்து அழைத்து செல்கிறார். போகும் போது வீரா கௌதமின் நண்பர்களை பிடித்து வைத்திருப்பதை பார்த்து கொன்னுடுவேன் என்று எச்சரிக்கிறாள்.
பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில் இசை திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. வர்ஷினி முதலில் நாங்க மாப்பிள்ளையை பார்க்கணும் என்று சொல்ல தரகர், சுப்ரதா அம்மா வீட்டில் அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க என்று சொல்கிறார். இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்பதாக சொல்கிறார். அடுத்ததாக கடையில் இசை விஷாலுக்காக ஸ்ரீஜா கேட்டபடி ஒரு கிப்ட்டை உருவாக்குகிறாள். அதை பிரியாவிடம் கொடுத்து விட்டு இசை, வெளியே கிளம்ப அதன் பிறகு ஸ்ரீஜா அங்கு வந்து அந்த கிப்ட்டை வாங்கிக் கொள்கிறாள். சுப்ரதா வீட்டிற்கு வந்த தரகர். ருக்குமணி வீட்டில் வர்ஷினி மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்று சொன்ன விஷயத்தை சொல்ல சுப்ரதா அதெல்லாம் வேண்டாம் ஜாதகம் பார்த்து செட்டான தான் மாப்பிள்ளை பார்க்கணும். அதுக்கு முன்னாடி பார்த்து அவங்க தேவை இல்லாம ஆசையை வளர்த்துக்கிட்டா பிரச்சனையாகி விடும் என்று சொல்கிறாள்.


Click it and Unblock the Notifications











