ஜீ தமிழ் சீரியல்கள் 22 செப்டம்பர் 2025: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில் இன்றைய எபிசோடில், ராமசந்திரன் வேலை செய்த கம்பெனிக்கு சென்று அங்கு உயர் பதவியில் இருக்கும் ஒருவனை பிடித்து விசாரிக்க அவன் எனக்கு ஒன்னும் தெரியாது சார்.. அவருடைய பி.எப் பணம் வந்துடுச்சு, அதுக்குப்புறம் தான் அவர் இறந்து விட்டதாக தெரிய வந்தது என்று சொல்லி பணத்தை எடுத்து கொடுக்கிறான். வெளியே வந்த வெற்றி துளசியிடம் மேடம் எனக்கு என்னமோ இவனுக்கு ஒன்னும் தெரியாதுனு நினைக்கிறேன், அவன் முகத்தில் பயம் தான் தெரிகிறது என்று சொல்கிறான். ஆனால் துளசி அவன் எதுக்கு உடனே பணத்தை எடுத்து தரணும்? எனக்கு சந்தேகமாக இருப்பதாக சொல்கிறான்.
அடுத்து மகேஷ் வெற்றிக்கு போன் செய்து என்னாச்சு? நான் வேணும்னா கிளம்பி வரவா என்று கேட்க வெற்றி அதெல்லாம் வேண்டாம், நீங்க கவலைப்படாதீங்க நாங்க கண்டுபிடிச்சிடுவோம் என்று சொல்ல மகேஷ் அவர் கிடைச்சா தாண்டா எனக்கு பிரச்சனையே என்று மனதுக்குள் சொல்கிறான். தொடர்ந்து அஞ்சலி துளசிக்கு போன் போட்டு விசாரிக்கிறாள். அப்பா வீட்டிற்கு கொண்டு வந்த பையில் ஒரு பில் இருந்ததை நினைவு கூர்ந்து மகேஷ்க்கு தெரியாமல் அதை பபோட்டோ எடுத்து அனுப்புகிறாள். பிறகு அந்த செல்போன் கடைக்கு சென்று விசாரிக்க சிவராமன் ஒரு போனை ரிப்பேர் செய்ய கொடுத்து இருந்தது தெரிய வருகிறது. அந்த போனை வாங்கி பார்க்க தெரியாத 5 நம்பர்களுக்கு போன் கால் சென்றிருப்பது தெரிய வருகிறது.

அண்ணா: சண்முகம் எதிர்பாராத விதமாக கௌதமை விசாரித்து வைஜெயந்திக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், சண்முகத்தின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்று தெரியாமல் வைஜெயந்தி குழம்பி போய் இருக்க வெட்டுக்கிளி, வைகுண்டம் ஆகியோர் அடுத்து என்ன செய்யப் போற என்று சண்முகத்திடம் கேட்கின்றனர் . இதனைத் தொடர்ந்து, நீதிபதி முன், அடுத்ததாக கௌதமின் நண்பர்களை விசாரிக்க வேண்டும் என்று சொல்கிறான். வைஜெயந்தி வக்கீல் சிவனாண்டி உரிய அனுமதி இல்லாம அவங்களை எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார்.
பிளாஷ்பேக் ஓப்பனாக, சண்முகம் ஏற்கனவே அவர்கள் மூவரையும் பிடித்து நீதிபதி நளினி வீட்டிற்கு அழைத்துச் சென்று இவர்களை விசாரிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டு அனுமதி வாங்கியது தெரிய வருகிறது. இதனால் வைஜெயந்தி தரப்பில் மேலும் அதிர்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து சண்முகம் கௌதமின் நண்பர்களை கூண்டில் ஏற்றி விசாரிக்க ரேப், மர்டர் ஆகியவற்றை செய்தது கௌதம் தான் என்று வாக்குமூலம் கொடுக்கின்றனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு கூடுதல் என அறிவிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் வைஜெயந்தி சண்முகத்தை சந்தித்து அடுத்ததா துரையை விசாரிக்கணும். அவன் ஜெயில்ல இருக்கான் அவனை வெளியே விட நான் அனுமதிக்க மாட்டேன் என்று சவால் விடுகிறாள்.

பாரிஜாதம்: விஷால், இசை பார்த்து நீ தான் அந்த பொண்ணா என்று அதிர்ச்சியாக இசை நான் பொண்ணு இல்ல.. என் தங்கச்சி தான் கல்யாண பொண்ணு, அவளுக்காகத்தான் நான் இங்கு வந்து வந்திருக்கேன் என்று சமாதானம் செய்து அவனை உட்கார வைக்கிறாள். அதன் பிறகு இசை, இங்க சாம்பார் இட்லி நல்லா இருக்கும் என்று சொல்ல விஷால் தன்னை கலாய்ப்பதாக நினைத்து கோபப்பட இசை இல்லை உண்மையாகவே சொல்கிறேன் என்று ஆர்டர் செய்கிறாள்.
விஷால், சாம்பார் இட்லி சாப்பிட்ட மாதிரியே இசையிடம் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை அதை நீங்களே உங்கள் வீட்டில் சொல்லிடுங்க என்று சொல்ல, இசை, இதை கவனிக்காததால் அவன் சொன்னது கேட்காமல் போகிறது. அடுத்ததாக இசை எல்லாம் ஓகே தானே என்று கேட்க விஷால் சாம்பார் இட்லியை பற்றி கேட்பதாக நினைத்து ஓகே என்று சொல்ல இசை அங்கிருந்து கிளம்பி வருகிறாள். மறுபக்கம் வர்ஷினி மற்றும் ராகவ் என இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். ராகவ் வர்ஷினி தான் கல்யாண பெண் என்று நினைத்து பேசுகிறான். வர்ஷினிக்கு ராகவ்வை பார்த்ததும் பிடித்து பார்க்க அவளும் தன்னுடைய அக்காவுக்காக வந்திருக்கும் விஷயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். இதையடுத்து இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போகிறது.


Click it and Unblock the Notifications











