ஜீ தமிழ் சீரியல்கள் 23செப்டம்பர் 2025: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
கெட்டிமேளம்: மகேஷ் வெற்றியை போட்டு தள்ள சொல்லி அடியாட்களை அனுப்பிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, மகேஷ் அனுப்பிய ஆட்கள் வெற்றியை கொல்ல முயற்சிக்க வெற்றி அவர்களை அடித்து ஓட விடுகிறான். இதையடுத்து சிவராமன் போட்டோவை காட்டி செல்போன் கடையில் விசாரிக்கின்றனர். அவன் அன்னைக்கு இவரை பார்த்த மாதிரி தான் இருக்கு, ஆனால் பாதி முகத்தை மூடிட்டு தான் வந்தாரு என்று சொல்கிறார். இன்னொருவரை இவரை இன்னைக்கு கூட பார்த்தேன் என்று சொல்ல இவர்கள் அவர் சொன்ன இடத்திற்கு வருகின்றனர்.
ஒருவர் பாதி முகத்தை மூடியபடி இருக்க அவரை பின் தொடர்கின்றனர். அஞ்சலி துளசிக்கு போன் போட்டு விசாரிக்க அப்பாவை பார்த்துட்டோம். அவரை தான் பாலோ பண்ணிட்டு போறோம், வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறோம் என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து அஞ்சலி லட்சுமியிடம் விஷயத்தை சொல்ல அவளும் சந்தோஷப்படுகிறாள். இங்கே வெற்றி, துளசி, முருகன், மகேஷ் என எல்லாரும் முகமூடி அணிந்தவரை பின் தொடர்ந்து வந்து ஒரு குடோனுக்குள் மடக்கி பிடிக்கின்றனர். முகமூடி அணிந்தவர் இவர்களை பார்த்து அதிர்ச்சியாக மகேஷ் அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.

அண்ணா: நேற்றைய எபிசோடில் சண்முகம், கௌதமின் நண்பர்களை விசாரித்து உண்மையை வர வைத்துவிடுகிறான். இதைடுத்து, வைஜெயந்தி அடுத்து நீ, துரையை தான் விசாரிக்கணும்.. ஆனால், அவனை நான் வெளியே விட மாட்டேன். ஜெயிலில் வைத்து அவனை கொன்னுடுவேன். அவன், தங்கச்சி மாலதியை கொன்னதும் நான் தான் என்று சொல்கிறாள். இதை மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் துரை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். அடுத்து கோர்ட் மீண்டும் கூடுகிறது, சண்முகம் அடுத்ததாக துரையை விசாரிக்க வேண்டும் என்று சொல்ல ஜெயிலில் இருப்பவனை எப்படி விசாரிக்க முடியும்,அதற்கான முன் அனுமதி வேண்டும் என என்று வழக்கறிஞர் சிவனாண்டி சொல்கிறாள். ஆனால், சண்முகம் அதற்கான முறையான அனுமதி வாங்கி இருப்பதாக சொல்லி துரையை அழைத்து கூண்டில் ஏற்றுகிறான்.
சண்முகம், துரையை விசாரிக்க அவன். கௌதம் ஒரு கொலை செய்தான். அதற்கான பழியை நான் ஏற்று கொண்டேன். அதற்காக என் தங்கச்சிக்கு டீச்சர் வேலை வாங்கி கொடுத்து எனக்கு 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தாங்க என்ற உண்மைகளை உடைக்கிறான்.

பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில், வர்ஷினி ராகவன் மீது காதல் கொள்கிறார். இந்த விஷயத்தை கேட்டு ருக்மணி அதிர்ச்சி அடைகிறாள். மறுபக்கம், ருக்மணி ஜோசியரை சந்தித்து ஜாதகம் பார்க்க செல்கிறாள். அந்த சமயத்தில் இசைக்கு ஃபோன் வர, அவள் வெளியில் சென்றுவிடுகிறாள். ஜாதகத்தில் இசைக்கும் விஷாலுக்கும் பொருத்தம் இல்லை என தெரிய வருகிறது. ஆனால் ருக்மணி இதை இசையிடம் இருந்து மறைக்கிறாள்.
என் தங்கச்சியோட வாழ்க்கை உன் கையில தான் இருக்கு என்று சொல்லி இசையை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிறாள். மறுபக்கம் விஷால் ஸ்ரீஜாவை சந்திக்க அவள் விஷாலிடம் தனது காதலை சொல்கிறாள். அடுத்ததாக வர்ஷினி, வீட்டுக்கு வந்து இசையிடம், அம்மா ஜாதகம் பொருந்திடுச்சுன்னு சொன்னாங்க.. ரெண்டு பேரும் ஒரே குடும்பத்துக்கு ஒன்னா வாழ போகிறோம் ரொம்ப சந்தோஷமா இருக்கு என தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள். ருக்மணி. தனது தோழியுடன் சென்று ஜோசியர் ஒருவரை சந்தித்து விஷால் ஜாதகத்துக்கு ஏற்ற மாதிரி இசையின் ஜாதகத்தை எழுதி தர சொல்கிறாள். ஜோசியர் மறுப்பு தெரிவிக்க இரண்டு பேரும் காதலிக்கறாங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டுறாங்க. ஜாதகம் பொருந்துற மாதிரி இருந்தா அவங்க வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்ல ஜோசியரை ஜாதகத்தை மாற்றி எழுதி தருகிறார். மறுபக்கம் சுபத்ரா தேவி ஜோசியரை சந்தித்து ஜாதகத்தை பார்க்க கிளம்புகிறாள்


Click it and Unblock the Notifications











