ஜீ தமிழ் சீரியல்கள் 29 செப்டம்பர்: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
கெட்டிமேளம்: சிவராமன் உயிரோடு இல்லை என்று தெரிந்து குடும்பத்தினர் உடைந்து போன நிலையில், வெற்றி, துளசி இருவரும் வீட்டுக்கு வர அபிராமி வழக்கம் போல, இது என்ன வீடா? சத்திரமா? உன் இஷ்டத்துக்கு வர, போற என்று கோபப்படுகிறாள். ஒழுங்கா இந்த வீட்டு மருமகளா நடந்துக்கோ என்று சொல்கிறாள். அப்போது, வெற்றி, ஒரு நேரம் அவங்கள இந்த வீட்டு மருமகளே இல்லைன்னு சொல்றீங்க இப்போ இந்த வீட்டு மருமகளா நடந்துக்கோனு சொல்றீங்க உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா என்று கேள்வி கேட்கிறான்.
பிறகு ரூமுக்கு வந்ததும் துளசியிடம் நீங்க எதுவும் பெருசா எடுத்துக்காதீங்க, அம்மா உங்கள பத்தி புரிஞ்சிக்கும் போது கண்டிப்பா வருத்தப்படுவாங்க என்று ஆறுதல் சொல்லி தோள் மீது கை வைக்க போக துளசி தள்ளி நிற்கிறாள். உங்களுக்கு என்னுடைய காதல் புரியலையா என்று வெற்றி கேட்க நீங்க ஒரு நல்ல மனுஷன் என்பதை புரிஞ்சுகிட்டேன். ஆனா ஒரு பொண்ணோட மனசுல இடம் பிடிக்கிற அளவுக்கு இங்கு இன்னும் மாறல என்று பதிலடி கொடுக்கிறாள்.

அடுத்த நாள் சண்முகம் குடும்பத்தினர் எல்லோரும் கோர்ட்டுக்குக் கிளம்ப சண்முகம், பரணி வண்டியில் கிளம்ப ரவுடிகள் அவர்களின் கதையை முடிக்க தயார் நிலையில் இருக்கின்றனர். இந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக சண்முகத்தின் பைக் டயர் வெடிக்க பிறகு எல்லோரும் ஒன்றாக காரின் சென்று விடுகின்றனர். இதனால் வைஜெயந்தியின் திட்டம் தோல்வியில் முடிகிறது.பிறகு சண்முகம் வைஜெயந்தி கூண்டில் ஏற்றி விசாரிக்கிறான். அப்போது, முருகன் சிலை காட்சி சொல்லும் என சொல்கிறான். சிவனாண்டி சிலை எப்படி சாட்சி சொல்லும் என்று நக்கல் செய்கிறான். பிறகு சண்முகம் வைஜெயந்தி வீட்டில் வைத்து பூஜை செய்த முருகன் சிலையை கொண்டு வருகிறான். அந்த முருகன் சிலையில் கேமரா மைக் என எல்லாம் இருப்பதையும் கூடவே ஒரு பென்டிரைவ் கனெக்ட் செய்யப்பட்டிருப்பதையும் சொல்லும் சண்முகம் அதை வெளியே எடுத்து நீதிபதியிடம் ஒப்படைக்க அதிலிருந்து வீடியோ ஆதாரங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாரிஜாதம்: சீரியலில் நிச்சயதார்த்த புடவை எடுக்க இசை வந்திருக்க விஷால் கடுப்பான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை பார்க்கலாம். அதாவது விஷால் தனது நண்பர்களிடம் அவ்வளவு சொல்லியும் அவர் புடவை எடுக்க வந்திருக்கா என்று இசை மீது கோபப்படுகிறான். பிறகு, இசை விஷாலுக்கு வீடியோ கால் செய்ய விஷால் இவ முகத்தை வேற பார்த்து பேசணுமா என்று போனை எடுக்க மறுக்கிறான். ஒரு கட்டத்தில் ஃபோனை எடுக்கும் விஷால் இசையை பேசவிடாமல் மீண்டும் ஸ்ரீஜாவை காதலிக்கும் விஷயத்தை சொல்கிறான். இசைக்கு இந்த முறையும் அவன் பேசுவது என்னவென்று கேட்காமல் போகிறது.
அடுத்ததாக சிந்தாமணி, பானுமதி உடன் சேர்ந்து ஒரு குறி சொல்லும் பெண்மணியை சந்தித்து ஏஐ குரலில் பார்த்திபன் பேசுவது போல ஏற்பாடு செய்து தேவகி பாட்டியை நம்ப வைக்க திட்டமிடுகின்றனர். அதன் பிறகு சிந்தாமணி பாட்டியை இங்கே குறி கேட்க அழைத்து வர பார்த்திபன் குரலில் என் பொண்டாட்டி பானுமதி பாவம் அம்மா அவளை வீட்ல சேர்த்துக்கோங்க என்று சொல்ல வைக்கின்றனர். இதனை தேவகி பாட்டியும் நம்பி விடுகிறார். அதன் பிறகு தேவகி பாட்டி பானுமதி கோவிலில் சந்தித்து அந்த வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறேன் என்று வாக்கு கொடுக்க இதை சுபத்ரா தேவியும் பார்த்து விடுகிறாள்.


Click it and Unblock the Notifications











