ஜீ தமிழ் சீரியல்கள் 30 செப்டம்பர்: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
அண்ணா: நேற்றைய எபிசோடில் அதாவது, சண்முகம் முருகன் சிலைக்கும் கேமரா, மைக் ஆகியவை இருப்பதை சொல்லி அதில் இருக்கும் பென்ட்ரைவ்வை எடுத்து நீதிபதியிடம் சமர்ப்பிக்கிறான். தொடர்ந்து வைஜெயந்தி செய்த அத்தனை சதி வேலைகளும் வெளியே வர அவளும் செய்த தவறுகளை ஒப்பு கொள்கிறாள். பிறகு இன்ஸ்பெக்டர் குருவும் அனைத்தையும் வைஜெயந்தி சொல்லி தான் செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறான். இதனால் நீதிபதி வைஜெயந்தி மற்றும் குரு என இருவருக்கும் தண்டனையை அறிவிக்கிறார். இருவரும் கைது செய்யப்படுகின்றனர். சண்முகம் வெற்றி பெற்றதால் அனைவரும் அவனை தூக்கி கொண்டாடுகின்றனர். இந்த நேரத்தில் சௌந்தரபாண்டி தலையில் துண்டை போட்டு முகத்தை மறைத்தபடி வெளியே வர சண்முகம் மடக்கி பிடித்து நான் ஜெயிக்க நீங்க தான் காரணம் என்று நன்றி சொல்லி வெறுப்பேற்றுகிறான்.

பாரிஜாதம்: வர்ஷினி, ராகவ் தன்னை கடைக்கு அழைத்துச் சென்று புடவைகளை எடுத்துக் கொடுத்ததாக சொல்லி சந்தோஷப்படுகிறாள். அந்த நேரத்தில் டெலிவரி பாய் ஒருவன் காலிங் பெல், அடித்த ராகவ் மற்றும் விஷால் என இருவரும் சேர்ந்து மருதாணியை அனுப்பி வைத்துள்ளதாக சொல்லிக் கொடுத்துவிட்டு செல்கிறான். மறுபக்கம் ராகவ், தனது தங்கை பல்லவியிடம் இந்த விஷயத்தைச் சொல்ல அவள் ராகவ்வின் கையைப் பிடித்து மருதாணியில் வர்ஷினி என பெயர் எழுதி பக்கத்தில் ஒரு ஹார்ட் போட்டு விடுகிறாள். ராகவ் இதை போட்டோ எடுத்து வர்ஷினிக்கு அனுப்பி வைக்கிறான். வர்ஷினி, இசையிடம் சொல்ல அவள் மருதாணியில் விஷால் என பெயர் எழுதி அதை அவனுக்கு அனுப்பி வைக்கிறாள்.
இதனால் கடுப்பாகும் விஷால், நேராக டாட்டூ ஷோரூமுக்கு சென்று டாட்டூ போட வேண்டும் என்று சொல்கிறான். டாட்டூ பாய் என்ன பெயர் போட வேண்டும் என்று கேட்க போனை பார்த்துக் கொண்டு விஷால் இசை என்று சொல்லிக்கிட்ட இசை என்ற பெயரை தான் பச்சை குத்த வேண்டும் என்று நினைத்து பாட்டூ போட்டு விடுகிறான். அதை போட்டோவும் எடுத்து இசைக்கு அனுப்பி வைக்க இசை, இதை பார்த்து சந்தோஷம் அடைகிறாள். பிறகு விஷால் மீண்டும் நண்பர்களின் ரூமுக்கு வர நண்பர்கள் இதை பார்த்து என்னடா இசையின் பெயரை டாட்டூ போட்டு இருக்க என்று சொல்ல விஷால் ஷாக்காகி கடைக்காரனுக்கு போன் போட்டு திட்டுகிறான். அடுத்ததாக தேவகி பாட்டி சுபத்ராவிடம் பானுமதி வீட்டுக்கு அழைத்து வருவது குறித்து பேசுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











