அப்பாவாக போகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் அண்ணா.. மகிழ்ச்சியை பகிர்ந்த விஜய் டிவி ஹீரோ!
சென்னை: விஜய் டிவியின் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகர் அவினாஷ். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்துவரும் நடிகை அன்ஷிதாவின் அண்ணன். பல ரியாலிட்டி ஷோக்களிலும் தொடர்களிலும் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டில் தன்னுடைய நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துக் கொண்டார்.
தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக காணப்படும் அவினாஷ், தற்போது தன்னுடைய மனைவி தெரசா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இதையொட்டி இருவரும் இணைந்திருக்கும்படியான க்யூட் புகைப்படங்களையும் அவர் தன்னுடைய பதிவில் இணைத்துள்ளார். மனைவியின் பிரக்னென்சி ரிப்போர்ட் மற்றும் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் அந்தப் பதிவில் அவர் வெளியிட்டுள்ளார்.

சீரியல் நடிகர் அவினாஷ்: சன் டிவியின் தில்லானா தில்லானா நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அவினாஷ்/ தொடர்ந்து ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், பல ரியாலிட்டி ஷோக்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் சீரியலிலும் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார் அவினாஷ். நடிகர் தலைவாசல் விஜய், ரேவதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த அழகு சீரியலில் அவர்களுக்கு மகனாக அவினாஷ் நடித்திருந்தார். இந்த சீரியல் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச்சை பெற்றுத் தந்தது.
விஜய் டிவி சீரியல்: இதையடுத்து அம்மன், சாக்லேட் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ள அவினாஷ் சன் டிவியின் கயல் சீரியலிலும் லீட் கேரக்டரில் நடித்திருந்தார் ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற சீரியலில் கண்ணன் என்ற கேரக்டரில் தற்போது நடித்து வருகிறார் அவினாஷ். முன்னதாக விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தபோது காலில் அடிபட்டதால் சில மாதங்கள் அவர் நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

கைக்கொடுத்த அன்ஷிதா: வீல்சேரில் தான் அவரது வாழ்க்கை தொடர்ந்தது. அந்த நேரத்திலும் தன்னுடைய பிரச்சனைகளை வெளிக்காட்டாமல் தன்னம்பிக்கையான வீடியோக்களை வெளியிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். அவருடைய தங்கையான ஹன்சிதாவும் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். குறிப்பாக வில்லி கேரக்டர்களில் இவர் நடித்து வந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய அண்ணனின் சோதனை காலகட்டத்தில் அவருடன் இணைந்து ரீல்ஸ் வீடியோக்களை அன்சிதாவும் பதிவிட்டு வந்தார்.

மனைவி கர்ப்பம் குறித்து அவினாஷ்: இதனிடையே, கடந்த ஆண்டில் தெரசா என்பவரை அவினாஷ் திருமணம் செய்து கொண்டார். 13 ஆண்டுகள் காதலித்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சூழ இவர்களின் திருமணம் சிறப்பாக நடந்த நிலையில், தற்போது தன்னுடைய மனைவி தெரசா கர்ப்பமாக இருப்பதாக அவினாஷ் அறிவித்துள்ளார். தன்னுடைய மனைவியின் பிரக்னன்சி ரிப்போர்ட், குழந்தையின் ஸ்கேன் போட்டோ போன்றவற்றை வைத்து இந்த ஜோடி போட்டோ சூட் எடுத்துள்ளது. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவினாஷ் வெளியிட்டுள்ள நிலையில், இவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











