வேலை இல்லாததே காரணம்.. கணவரை பிரிந்த ரக்ஷிதா.. பதிலடி கொடுத்த தினேஷ்!

சென்னை : விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா.

ஆனால் அந்த சேனலின் சரவணன் மீனாட்சி தொடர் இவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம செய்துக் கொண்டார்.

பிரிவோம் சந்திப்போம் தொடர்

பிரிவோம் சந்திப்போம் தொடர்

விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் தொடர் சிறப்பான வரவேற்பை ரசிக்களிடையே பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. ஆனால் ரக்ஷிதாவிற்கு சிறப்பான பெயரை பெற்றுக் கொடுத்த சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சிதான்.

சரவணன் மீனாட்சி தொடர்

சரவணன் மீனாட்சி தொடர்

இந்தத் தொடரில் மீனாட்சியாக சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் நடித்தார். இந்தத் தொடரில் மகா என்ற கேரக்டரில் அவர் நடித்துவந்த நிலையில், தனது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்று கூறி சீரியலில் இருந்து விலகி விட்டார்.

சீரியல் நடிகை ரக்ஷிதா

சீரியல் நடிகை ரக்ஷிதா

தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய தொடரில் ரக்ஷிதா கமிட்டாகியுள்ளார். இதன் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னுடைய சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை ரக்ஷிதா திருமணம் செய்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கணவரை பிரிந்த ரக்ஷிதா

கணவரை பிரிந்த ரக்ஷிதா

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளை கடந்த நிலையில், குழந்தை இல்லாத காரணத்தால்தான் இருவரும் பிரிந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை தினேஷ் மறுத்தார். காலம் ஒருநாள் அனைத்தையும் மாற்றும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

சன் டிவி தொடரில் தினேஷ்

சன் டிவி தொடரில் தினேஷ்

இதனிடையே, தினேஷிற்கு சீரியலில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காததே இவர்களது பிரிவிற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தினேஷிற்கு சன் டிவியில் புதிய சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. லிவிங்ஸ்டன் மகளுடன் இணைந்து இந்த சீரியலில் நடிக்கவுள்ளார் தினேஷ்.

ரக்ஷிதாவிற்கு பதிலடி

ரக்ஷிதாவிற்கு பதிலடி

சீரியலில் நடிக்காமல் இருந்த தினேஷ் -ரக்ஷிதா இடையில் அதுவே மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி அவர்களுடைய பிரிவுக்கும் காரணமாக அமைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பிரபல சீரியலில் அவர் கமிட்டாகியுள்ளது ரக்ஷிதாவிற்கு பதிலடி கொடுக்கும்வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X