Venkat Renganathan: சீரியல் நடிகர் வெங்கட் கனவை தகர்த்த விஜய்.. கண்கலங்கிய நடிகர்!

சென்னை: நடிகர் வெங்கட் ரங்கநாதன் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்த தொடரில் மீனா மற்றும் ஜீவா கேரக்டர்கள் மற்றும் அவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலை தொடர்ந்து தற்போது கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதில் ஷண்முகமாக அதிகமாக படிக்காத கேரக்டரில் நடித்துவரும் அவர், தன்னுடைய மாமாவின் வளர்ப்பு மகளான ரேணுகாவை காதலிப்பதாக காட்டப்பட்டு வருகிறது. இந்த அவரது காதல் ரேணுகாவிற்கு எப்போது தெரியவரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இதனிடையே பணக்கார வீட்டு பெண்ணான அனு தற்போது ஷண்முகத்தை காதலிப்பதாகவும் அவருக்கு அடுத்தடுத்த பல நல்ல விஷயங்களை செய்வதாகவும் காணப்படுகிறது. ஷண்மும் காதல் விவகாரம் தெரியவந்தால் அனு எப்படி ரியாக்ட் செய்வார் என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் வெங்கட். அடுத்தடுத்த ரீல்ஸ்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரது பேஜை பாலோ செய்து வருகின்றனர்.

Serial Actor Venkat Renganathan revealed his wish to act with Actor Vijay

நடிகர் வெங்கட்ரெங்கநாதன்: நடிகர் வெங்கட் ரங்கநாதன் தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருபவர். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவாவாக நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டவர். இந்த சிரியலில் ஜீவா மற்றும் மீனா ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்தது. மேலும் அண்ணனும் கட்டுப்படும் தம்பியாக, தம்பிகளை அரவணைத்து செல்லும் அண்ணனாக இவரது நடிப்பு மாஸ் காட்டியது. இந்நிலையில் இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள நிலையில் அதில் மீனா கேரக்டர் இடம்பெற்றுள்ளது. ஆனால் ஜீவா இடம்பெறவில்லை.

கிழக்கு வாசல் தொடர்: இதனிடையே தற்போது விஜய் டிவியின் கிழக்கு வாசல் தொடரில் ஷண்முகம் என்ற கேரக்டரில் அதிகமாக படிக்காமல், ஆட்டோ ஓட்டும் கேரக்டரில் வெங்கட் நடித்து வருகிறார். தொடர்ந்து அனுவிற்கு கார் ஓட்டுநராக மாறி, அவரது விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார். ஷேண்முகத்தை அனு காதலிக்கும் நிலையில், அவரை அவரது நிறுவனத்தின் மேனேஜராகவும் மாறியுள்ளார். ஆனால் அவரது விருப்பம் முழுவதும் அவரது மாமாவின் வளர்ப்பு மகளான ரேணுகாவின் மீதுதான் இருக்கிறது. இந்த விஷயம் அனுவிற்கு தெரியவந்தால் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் வெங்கட். அடுத்தடுத்து வீடியோக்கள், ரீல்ஸ், புகைப்படங்கள் என அவரது இன்ஸ்டாகிராம் பிசியாக காணப்படுகிறது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில் வெங்கட் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ அவரது வருத்தத்தை காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் ரசிகர்களும் வருத்தமடைந்து வெங்கட்டிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். நம் அனைவரின் வாழ்க்கையிலும் நிறைய கனவுகள் உள்ளதாக இந்த வீடியோவை அவர் துவங்கியுள்ளார். அந்தக் கனவை நிறைவேற்ற நாம் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்த கனவு: இதேபோல தனது வாழ்க்கையிலும் அதிகமான கனவுகள் உள்ளதாகவும் அதில் முக்கியமான கனவு விஜய் அண்ணாவுடன் படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும என்பது தன்னுடைய நீண்டநாள் கனவு என்றும் கூறியுள்ளார். தான் விஜய்யுடன் ஒரு காட்சியிலாவது கூட நிற்பது போலவாவது நடித்து விடவேண்டும் என்று தினமும் தூங்கப்போகும் முன்பு தினந்தோறும் பிரார்த்தனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஜய் கூறியது தனக்கு மிகவும் வருத்தமளித்துள்ளதாகவும் நான் அவருடன் நடிக்க வேண்டும் என்பது மனதில் பதிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிறைவேறாத ஆசை: அவருடன் நடிக்கும் முயற்சியில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாகவும் அது நடக்கவில்லை என்றும் எல்லாமே நேரம்தான் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு தனக்கு வருத்தத்தை அளித்துள்ளதாகவும் கூறியுள்ள வெங்கட், இதைகூட மற்றவர்கள் கிண்டல் செய்யலாம் என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். சீரியலில் மிகவும் பிரபலமாக இருந்துவரும வெங்கட் ரங்கநாதனுக்கு இப்படி ஒரு விருப்பம் உள்ளதுகுறித்து அவருக்கு தற்போது ரசிகர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X