முண்டா பனியன் பிளவுஸ்.. முந்தானையில் முடிச்சு.. இளசுகளை மிரள வைத்த அர்ச்சனா மாரியப்பன்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் மற்றும் வில்லியாக வந்து ரசிகர்களின் மனங்களை வென்ற நடிகை அர்ச்சனா மாரியப்பன். வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் ஆதரவை பெற்றவர்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துத் தனது முத்திரையைப் பதித்துள்ளார். சீரியல்களில் எப்போதும் புடவையுடன் பக்கா ட்ரெடிஷனல் லுக்கில் தோன்றும் அர்ச்சனா, நிஜ வாழ்க்கையிலும், சமூக வலைத்தளங்களிலும் மாடர்ன் மற்றும் போல்டான நபர் ஆவார்.

Serial Actress Archana Mariappan Photoshoot
Photo Credit:

முந்தானை முடிச்சு: இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா மாரியப்பன், அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் பதிவிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த இன்ஸ்டா போஸ்ட்டில், கத்திரிப்பூ மற்றும் மெரூன் கலந்த பார்டர் கொண்ட புடவை அணிந்து, அதற்கு பிளவுஸுக்குப் பதிலாக, வெள்ளை நிற முண்டா பனியன் அணிந்து, புடவையின் முந்தானையைத் தோளில் ஒரு கச்சிதமான முடிச்சாகப் போட்டு படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அவரது ரசிகர்கள், இதுதான் நிஜமான முந்தானை முடிச்சோ? என்றும், இப்படி ஒரு வித்தியாசமான ஸ்டைலில் புடவை கட்டி நாங்க பார்த்ததே இல்லை என்றும் ஜாலியாகக் கமெண்ட்டுகளைத் தட்டி அருகிறார்கள். அவர் இந்த புகைப்படங்களைப் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே லைக்ஸ்களும், கமெண்ட்டுகளும் குவிந்து அவரின் கமெண்ட்பாக்ஸ் நிரம்பி உள்ளது.

Serial Actress Archana Mariappan Photoshoot
Photo Credit:

இன்ஸ்டா ஃபாலோவர்ஸ்: அர்ச்சனா மாரியப்பனின் இந்தத் திடீர் கிளாமர் லுக் இவ்வளவு வைரலாவதற்கு காரணமே அவரின் கச்சிதமான நோ-மேக்கப் லுக் தான். நெற்றியில் ஒரு குட்டிப் பொட்டு, காதுக்கு பாரம்பரியமிக்க ஜும்கா கழுத்தில் ஒரு மெல்லிய பட்டாம்பூச்சி டாலர் செயின் என மிக நேர்த்தியாகத் தன்னை அழகுப்படுத்தி உள்ளார். சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள அர்ச்சனாவுக்கு, நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸின் எண்ணிக்கை எகிறிக்கொண்டே போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X