ஒரு நாளைக்கு 15 பேம்பர்ஸ் மாத்துவோம்.. யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. கண் கலங்கிய நேத்ரன் மனைவி!

சென்னை : சின்னத்திரையில் பல சீரியல்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த நேத்ரன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு காலமானார். அவரது மறைவில் இருந்து மீளா துயரத்தில் இருக்கும் நேத்ரனின் மனைவி தீபா, என் கணவருக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என கண்ணீர் மல்க யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், நேத்ரனுக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது, அதற்காக ஹோமியோபதி மருந்து எடுத்துக்கொண்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் கடந்த 4 ஆண்டுகளாகவே அடிக்கடி வயிற்று வலியுடனும் அவதிப்பட்டு வந்தார், அதற்கும் சிகிச்சையை எடுத்துக்கொண்டார். ஆனால், எதற்காக அந்த வயிறு வலி என்று தெரியவில்லை. அப்போது கடந்த வருடம் பிப்ரவரி மாதம் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதுவும் கேன்சர் அட்வான்ஸ் ஸ்டேஜ் இருப்பது எங்களுக்கு நான்கு மாதங்களுக்கு பிறகு தான் தெரியவந்தது. அதனால், அவரால் சரியாக சாப்பாடு சாப்பிட முடியாது,கொஞ்சம் கொஞ்சமாத்தான் சாப்பாடு சாப்பிடுவாரு. இதனால் அவருடைய எடை வெறும் 36 கிலோ வரை வந்துவிட்டது. ஆள் அடையாளமே தெரியாதபடி மாறிவிட்டார்.

Deepa Nethran interview

யாருக்கும் வரக்கூடாது: சில வாரங்கள் கழித்து அவருக்கு கீமோதெரபி ஆரம்பித்தோம், முதல் ஐந்து நாட்களில் நல்லா இருந்தாரு ஆறாவது நாளிலிருந்து அவரை அறியாமலே மோஷன்போக ஆரம்பிச்சிட்டாரு, ஒரு நாளைக்கு 15 பேம்பர்ஸ் மாத்தும் அளவிற்கு இருக்கும். நான் இருந்தால், நான் பார்த்து கொள்வேன், எனக்கு முடியலன்னா பசங்க துடைப்பாங்க, பசங்க என் அப்பா தானே நான் பார்த்துக்கொள்கிறேன், ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொன்னாங்க, ஆனால், நேத்ரனால், அதை ஏற்றுக்கொள்ளவே முடியல, பிள்ளைங்க துடைக்க வேண்டாம். நீயே வா நான் வெயிட் பண்றேன்னு சொல்லுவாரு. நான் ஷூட்டிங்ல இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை பர்மிஷன் போட்டுட்டு வந்து பேம்பர்ஸ் மாத்திட்டு போவேன் இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது.

வயிறு வலி: அவருக்கு 4 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்தது, ஆரம்பத்திலேயே என்ன பிரச்சனை என்று ஸ்கேன் எடுத்துப் பார்த்திருந்தால், நேத்ரனை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், இது சாதாரண வலிதான் என அவர் அலட்சியமாக இருந்து விட்டார். ஒரு வேளை அப்போதே இதை கவனித்து இருந்தால், என் கணவர் இன்று உயிரோடு இருந்து இருப்பார் என்று மறைந்த சீரியல் நடிகர் நேத்திரன் குறித்து அவரது மனைவி தீபா கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.

காதல் திருமணம்: சீரியல் நடிகரான நேத்ரன் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர், தொலைக்காட்சியில் முதன் முதலாக மருதாணி என்ற சீரியலில் அறிமுகமானார். அந்த சீரியலைத் தொடர்ந்து, பல சீரியல்களில் நடித்து பிரபலமான நேத்ரன் வில்லனாகவும் நடித்துள்ளார். சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த, தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் சீரியல்களில் நடித்து வந்த தீபா, குழந்தை பிறந்த பின் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். குழந்தைகள் வளர்ந்த பின் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்த, தீபா சிங்கப்பெண்ணே, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: interview பேட்டி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X