சின்னத்திரையே போதும்… தேவி க்ருபா
தென்றல் தொடரில் புஜ்ஜிம்மாவாக வந்து கலக்கும் தேவி க்ருபாவின் உடைகள் இளம் பெண்களையும் இல்லத்தரசிகளையும் அதிகம் கவரும். இந்த உடைகள் எல்லாம் அவரே டிசைன் செய்ததாம். நடிகை மட்டுமல்ல நான் ஒரு காஸ்ட்யூம் டிசைனரும் கூட என்று கூறி ஆச்சரியப்படுத்துகிறார் தேவி க்ருபா.
சன் டிவி மட்டுமல்லாது ஜெயா டிவியில் மாயா சீரியல், வீட்டுமனை விளம்பரம், நிகழ்ச்சித் தொகுப்பு என ஏதாவது சேனலில் வந்து கண்கள் படபடக்க பேசுகிறார்.
தன்னைவிட தன் வீட்டினர்தான் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். என்று தான் டிவியில் நடிக்க வந்தது பற்றி கூறுகிறார் தேவிக்ருபா..

எட்டாவது படிக்கும் போதே
என்னோட ஒரிஜினல் பெயர் அஞ்சலி. நான் எட்டாவது படிக்கும் போதே நடிக்க வந்துட்டேன். நான் நடிக்க வந்து 12 வருஷம் ஆயிருச்சு. எத்தனையோ சீரியல்ல நடித்திருந்தாலும் தென்றல் புஜ்ஜிம்மா பெயர் வாங்கித்தந்த சீரியல்.

நடிக்கத்தான் சொன்னாங்க
எல்லா குழந்தைகளையும் வீட்டுல 'படி படி'னு சொல்லி வளர்ப்பாங்க. ஆனா என்னை 'நடி நடி'னு சொல்லி வளர்த்தாங்க. இத்தனை வருஷம் ஓடிப்போச்சானு எனக்கே ஆச்சர்யமாதான் இருக்கு.

காஸ்ட்யூம் டிசைனர்
''தென்றல், மாயா சீரியல்கள்ல நான் போட்டுட்டு வர்ற பல காஸ்ட்யூம்ஸ், என்னோட கை வண்ணம்தான். அதைப் பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் அவங்களுக்கும் டிசைன் செய்து தரச் சொல்லிக் கேட்பாங்க. எனக்குதான் நேரம் கிடைக்கிறதில்லை.

புடவை நல்லாயிருக்கா?
ஆரம்பத்தில் பிளெய்ன் புடவைகளில் ஃபேப்ரிக் பெயின்ட்டால டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் பார்ட்டி வேர் புடவைக்கு ஒரு ஐடியா தோணுச்சு. புடவை வாங்கி, அதுல நானே பார்டர் வொர்க் செய்தேன். பார்டர்லயும் சேலையின் பள்ளு பகுதியிலயும் ஸ்டோன் வொர்க் செய்தேன். ஃப்ரெண்ட்ஸ் பார்த்துட்டு பாராட்டினாங்க.

சினிமா வாழ்க்கை எப்படி?
பயம் அறியான் படத்தில் நடித்திருக்கும் தேவி க்ருபாவிற்கு சினிமாவை விட சின்னத்திரைதான் நடிக்க எளிதாக இருக்கிறதாம். எனவே சின்னத்திரையே போதும் என்று செட்டில் ஆகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











