Divya Shridhar: இத்தனை பட்டும் திருந்தலையே.. தன்னுடைய சொந்தக்கதையை காமெடியாக்கிய திவ்யா ஸ்ரீதர்!
சென்னை: செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் நடிகை திவ்யா ஸ்ரீதர் சீரியலின் மூலம் அதிகமான ரசிகர்களை பெற்று வருபவர். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், முன்னதாக தன்னுடன் நடித்த அர்னவை காதலித்து ஐந்து ஆண்டுகள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர்.
இவர்கள் இருவரின் திருமணமும் இந்து மற்றும் முஸ்லிம் முறைப்படி நடந்த நிலையில், ஒரு கட்டத்தில் அர்னவ் கர்ப்பமாக இருக்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸ் நிலையத்தில் திவ்யா புகார் அளித்திருந்தார். இதையடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியாகியுள்ளார். இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனில் பங்கேற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியின் இரண்டாவது எலிமினேஷனாக வெளியேறியுள்ளார் அர்னவ். இதனிடையே அடுத்தடுத்த வீடியோக்களை திவ்யா ஸ்ரீதர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்

நடிகை திவ்யா ஸ்ரீதர்: செவ்வந்தி சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் செல்லம்மா சீரியல் நாயகன் அர்னவை 5 ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர். இதையடுத்து இவர்களின் திருமணம் இந்து மற்றும் முஸ்லிம் முறைப்படி நடந்தது. இதனிடையே அர்னவ், கர்ப்பமாக இருக்கும் தன்னை டார்ச்சர் செய்வதாகவும் அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அர்னவ் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த நிலையில் ஜாமினில் வெளியில் வந்து மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கியிருந்தார்.
பிக்பாஸ் 8 எலிமினேஷன் அர்னவ்: செல்லம்மா சீரியலில் உடன் நடித்த அன்ஷிதாவுடன் அர்னவிற்கு பழக்கம் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அர்னவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இடையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கர்ப்பமாக இருந்து தன்னந்தனியாக குழந்தையை பெற்றுக்கொண்ட திவ்யா ஸ்ரீதர், தற்போது மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவர் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 8ல் அர்னவ் மற்றும் அன்ஷிதா இருவரும் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து முன்னதாக தங்களுக்கு தெரியாதது போல நிகழ்ச்சியின் முதல் நாளில் இவர்கள் இருவரும் நடந்து கொண்டனர்.
திவ்யா ஸ்ரீதர் வீடியோ: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இவர்களுக்குள் அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டது. இதையடுத்து திவ்யா ஸ்ரீதரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அடுத்தடுத்து டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது வார எலிமினேஷனாக அர்னவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் சக போட்டியாளர்கள் மீது தன்னுடைய வன்மத்தை கக்கும் வகையில் பேசியிருந்தார். இதற்கு விஜய் சேதுபதி அவரை திட்டியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து வீடியோக்களை திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
அடுத்தடுத்த வீடியோக்கள்: நேற்றைய தினம் எது செய்தாலும் சும்மா இருப்பேன் என்று நினைத்தாயா என்பதாக ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். தன்னை அடிக்கும் கணவனை பதிலுக்கு கன்னத்தில் பளார் விடுவதாக இந்த வீடியோவில் காணப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் வடிவேலு காமெடியாக தான் துன்பப்பட்டேன், துயரப்பட்டேன், துக்க பட்டேன் என்பதாக திவ்யா கூறுவதாக புதிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இதற்கு பதிலாக இவ்வளவு பட்டும் நீ திருந்தலையே ப்ரோ என்பதாக கமெண்ட் வர, அதைக் கேட்டு திவ்யா ஸ்ரீதர் அதிர்ச்சி அடைவதாக இந்த ரீல்சை வெளியிட்டுள்ளார் திவ்யா. இதனிடையே, இது அவரது சொந்த வாழ்க்கையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் திவ்யா ஸ்ரீதர்?: அடுத்ததாக பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் என்ட்ரியாக திவ்யா ஸ்ரீதர் நிகழ்ச்சியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அர்னவ் விவகாரத்தில் ஏராளமான ரசிகர்களின் அனுதாபத்தை சம்பாதித்துள்ள திவ்யாவிற்கு இந்த நிகழ்ச்சி எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அர்னவும் அன்ஷிதாவும் நிகழ்ச்சியில் இருக்கும்போது திவ்யா ஸ்ரீதர், உள்ளே வந்தால் நிகழ்ச்சி மேலும் களைகட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அர்னவ் தற்போது வெளியேறியுள்ளார். இதனால் அன்ஷிதா மற்றும் திவ்யா ஸ்ரீதர் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











