Divya Sridhar: சீக்கிரமே வளர்ந்து விடுகிறார்கள்.. மகளின் முதலாமாண்டு பிறந்தநாளை பகிர்ந்த திவ்யா ஸ்ரீதர்!

சென்னை: சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் சக நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்த சூழலில் இவர்கள் இருவரின் திருமண வாழ்க்கை சில மாதங்களிலேயே கசந்தது. இதையடுத்து அர்ணவ் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும் இதை கேட்டால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் திவ்யா ஸ்ரீதர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் குறை கூறிக் கொண்டனர்.

இருவரும் பிரிந்த சூழலில் திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத சூழலில் குழந்தையும் அழைத்துக்கொண்டு திவ்யா ஷூட்டிங்கிற்கு வந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு ஒரு வயது ஆனதை அழகான வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் திவ்யா ஸ்ரீதர்.

Serial actress Divya sridhar expressed happiness about her daughters first birthday

சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர்: சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். முன்னதாக இவர் சீரியல் நடிகர் அர்ணவை காதலித்து இரு வீட்டாரின் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களிலேயே இவர்களது திருமண வாழ்க்கை கசந்தது. அர்ணவ் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதாகவும் அதை கேள்வி கேட்டால் தன்னை அடிப்பதாகவும் காவல் நிலையத்தில் திவ்யா ஸ்ரீதர் புகார் அளித்திருந்தார். இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்கள் மூலமாக குற்றம் சாட்டிக் கொண்டனர். இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நிலையில் இருவரும் பிரிந்தனர்.

செவ்வந்தி சீரியல்: இதையடுத்து செவ்வந்தி சீரியல் குழுவினர் திவ்யா ஸ்ரீதருக்கு வளைகாப்பு நடத்தியதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டில் திவ்யா ஸ்ரீதருக்கு மகள் பிறந்திருந்தார். தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு திவ்யா ஸ்ரீதர் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்ததையும் பார்க்க முடிந்தது. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய மகள் குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வந்தார் திவ்யா. இந்நிலையில் தன்னுடைய மகளுக்கு ஒரு வயது ஆகிவிட்டதை அவர் வீடியோ ஒன்றின் மூலம் தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் பாவாடை சட்டையில் அவரது மகள் க்யூட்டாக நடந்து வருவதை பார்க்க முடிந்தது.

அனைத்தையும் கொண்டாடுங்கள்: காலம் வெகு விரைவில் கடந்து விடும் என்றும் ஒவ்வொரு விஷயத்தையும் கொண்டாடுங்கள் என்றும் இந்த வீடியோவில் திவ்யா ஸ்ரீதர் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது அவர் நடித்து வரும் செவ்வந்தி சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த சீரியலில் தற்போது நட்சத்திராவும் இணைந்துள்ள சூழலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான எபிசோட்களை இந்த சீரியல் கொடுக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவருக்கு இடையில் போட்டி பலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

செவ்வந்தியில் இணைந்த நட்சத்திரா: கடந்த சில வாரங்களுக்கு முன்பு செவ்வந்தி சீரியல் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் புதிய புதிய களங்களுடன் இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி நடைபோடும் என்று சீரியல் தரப்பினர் நம்பிக்கையும் உற்சாகமும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது திவ்யாவுடன் போட்டியிட நட்சத்திராவும் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு போராட்டங்களை சந்தித்துவரும் பெண்ணாக செவ்வந்தியாக இந்த சீரியலில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார் திவ்யா. அவருக்கு கணவர் மற்றும் நண்பரின் உதவி தொடர்ந்து கிடைத்து வருவதையும் இந்த சீரியல் தொடர்ந்து காட்சிப்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X