Divya Sridhar :குழந்தையுடன் சூட்டிங் கிளம்பிய சீரியல் நடிகை.. குவியும் பாராட்டு!
சென்னை : செவ்வந்தி தொடரில் நடித்துவந்த சின்னத்திரை நடிகை திவ்யா ஸ்ரீதர், உடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
திவ்யா ஸ்ரீதர், கர்ப்பமாக இருந்த நிலையில் தொடர்ந்து தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அர்னவை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அர்னவ் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவர் தன்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும் என்று சமீபத்தில் வீடியோ மூலம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மீண்டும் சீரியல்களில் நடிக்கும் திவ்யா ஸ்ரீதர் :
செவ்வந்தி தொடரில் நாயகியாக நடித்து வரும் திவ்யா ஸ்ரீதர், உடன் நடித்த அர்னவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கர்ப்பமாகவும் ஆனார். ஆனால் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் அவர்கள் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அர்னவ் கர்ப்பமாக இருக்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக நள்ளிரவில் திவ்யா, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அர்னவ் உடன் நடிக்கும் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் உள்ளதாக புகார் எழுந்தது.
இதை விசாரித்த காவல்துறையினர், அர்னவை கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து சில வாரங்களில் அவர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். தன்னை அர்னவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முன்னதாக திவ்யா கோரிக்கை விடுத்த நிலையில், அதை நிராகரித்த அர்னவ், பின்னர், தன்னுடைய குழந்தையை பார்க்க வேண்டும் என்று கதறியதையும் வீடியோ மூலம் வெளியிட்டார். இவர்கள் இருவருக்குள்ளும் பிரிவு தொடர்ந்து வருகிறது.
கர்ப்பமாக இருந்த திவ்யாவிற்கு சீரியல் குழுவினரே வளைகாப்பு செய்து வைத்த நிலையில், அவருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவர், தற்போது மீண்டும் சீரியலில் நடிக்கத் துவங்கியுள்ளார். அவர் தற்போது சீரியலில் நடிப்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவதையும் பார்க்க முடிகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் தன்னுடைய குழந்தையையும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு எடுத்து வருகிறார்.
குழந்தையை பார்த்துக் கொள்ள அவருக்கு யாரும் இல்லாத நிலையில், குழந்தையுடன் அவர் சூட்டிங் ஸ்பாட் வருவதை பார்க்க முடிகிறது. இதன் வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கணவரை பிரிந்த நிலையில் தற்போது, தன்னந்தனியாக தன்னுடைய குழந்தையுடன் அவர் சூட்டிங் ஸ்பாட் வருவது அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இதன் வீடியோவில் தன்னுடைய குழந்தையை தோளில் அணைத்தபடி அவர் காரிலிருந்து இறங்கி வருவதை பார்க்க முடிகிறது.
மீண்டும் தன்னுடைய வேலைக்கு திரும்பியுள்ளதை அவர் இந்த வீடியோவின் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்றும் வலிமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் இந்த கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இதனிடையே, திவ்யாவின் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் ஏராளமானோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். மேலும் கடைசி வரை அர்னவிற்கு டைவர்ஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அட்வைஸ்களை கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











