Divya Sridhar :இலங்கை பெண்ணையும் காதலித்து கர்ப்பமாக்கினார்.. அர்ணவ் குறித்து திவ்யா அடுத்த புகார்!

சென்னை : சின்னத்திரை நடிகர்கள் திவ்யா மற்றும் அர்ணவ் இருவரும் சீரியலில் நடிக்கும்போது காதலித்து தங்களது மத முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அர்ணவ், கர்ப்பமாக இருக்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக திவ்யா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து அர்ணவை கைது போலீசார் கைது செய்தனர். அவர் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். திவ்யாவிற்கும் குழந்தை பிறந்துள்ளது.

Serial actress Divya sridhar raised new complaint about Arnav

அர்ணவ் இலங்கை பெண்ணை ஏமாற்றியுள்ளதாக திவ்யா புகார் : சின்னத்திரையில் சீரியலில் இணைந்து நடித்த அர்ணவ் மற்றும் திவ்யா ஸ்ரீதர் இருவரும் காதலித்து, இரு மத முறைப்படி திருமணமும் செய்துக் கொண்டனர். இருவரும் ஒரே வீட்டில் வசித்துவந்த நிலையில், திடீரென ஒருநாள் நள்ளிரவில் தன்னுடைய கணவர், கர்ப்பமாக இருக்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.தொடர்ந்து அர்ணவை கைது செய்த போலீசார் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த திவ்யாவிற்கு செவ்வந்தி சீரியல் குழுவினரே, வளைகாப்பு செய்து வைத்தனர். தொடர்ந்து அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில், செல்லம்மா சீரியலில் அர்ணவும், செவ்வந்தி தொடரில் திவ்யாவும் நடித்து வருகின்றனர். குழந்தை பிறப்பை தொடர்ந்து தற்போது மீண்டும் சீரியல்களில் நடிப்பதை துவங்கியுள்ளார் திவ்யா.

தற்போது தன்னுடைய குழந்தையுடன் அவர் செவ்வந்தி சீரியல் ஸ்பாட்டிற்கு வருகிறார். சமீபத்தில் விருது வழங்கும் விழாவிற்கும் அவர் குழந்தையுடன்தான் வந்திருந்தார். இதையொட்டி பல்வேறு விமர்சனங்களையும் அவர் சந்தித்தார். மக்களிடம் அனுதாபத்தை பெறுவதற்காகவே அவர் தன்னுடைய குழந்தையுடன் சூட்டிங்கிற்கு வருவதாகவும், முன்னதாக அவர் தன்னுடைய முதல் குழந்தையை சூட்டிங்கிற்கு அழைத்து வரவில்லையே என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

முன்னதாக தன்னுடன் சீரியலில் நடிக்கும் நடிகை ஒருவரை அர்ணவ் காதலிப்பதாகவும் அதனால்தான் தன்னை விட்டு அவர் விலகியதாகவும் திவ்யா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது இலங்கை பெண் ஒருவரையும் அர்ணவ் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியுள்ளதாக புதிய புகாரை திவ்யா தெரிவித்துள்ளார். அவர் தனது சமீபத்திய பேட்டியில், அர்ணவுடன் தனக்கு பிரச்சினை இருந்த நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் இதுகுறித்து கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரசன்னா என்ற இலங்கையை சேர்ந்த தன்னுடைய தோழியையும் அர்ணவ் இப்படித்தான் ஏமாற்றியுள்ளதாக அந்தப் பெண் குறிப்பிட்டதாகவும், இது தொடர்பான புகைப்படங்களை அவர் அனுப்பி வைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதை அறிந்ததும் தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும் திவ்யா கூறியுள்ளார். ரசிகையாக தன்னிடம் பேசவந்த அந்தப் பெண்ணை ஏமாற்றி காதலித்து, கர்ப்பமாக்கிய அர்ணவ், பின்பு கைவிட்டுள்ளதாகவும் அதற்கு அவருடைய நண்பரே சாட்சி என்றும் திவ்யா மேலும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X