அப்போ சீரியல் லைட் ஜாக்கெட்.. இப்போ பின்புறத்தில் சிங்கம் டாட்டூ.. ஃபரீனா ஆசாத் மிரட்டுறாரே!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமான ஃபரீனா ஆசாத் ஜாக்கெட்டில் வித்தியாசமான கோயில் டிசைன் வைத்து பரபரப்பை பற்ற வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது தனது பின்புறத்தில் சிங்கம் டாட்டூவை ஒட்டியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு, கார்த்திகை தீபத்தன்று, சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத் தான் அணிந்திருந்த ஜாக்கெட்டில் கோயில் வடிவமைப்பையும், சீரியல் செட்டையும் இணைத்து ஒரு புதிய பாணியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

டிசம்பர் 4, 2025 அன்று, வெளியான இந்த சம்பவம், திரைத்துறையில் பிரபலங்களின் ஆடைத் தேர்வுகள் குறித்த சர்ச்சைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
சீரியல் நடிகை ஃபரினா ஆசாத்: கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 'பாரதி கண்ணம்மா' தொடரின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ஃபரீனா ஆசாத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான ஜாக்கெட் அணிந்த காணொளியை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து இவர் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. சமீப காலமாக சினிமா நிகழ்ச்சிகளையும் ஃபரினா ஆசாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஹாட்ஸ்பாட் 2 மச் பிரஸ்மீட்டையும் இவர் தொகுத்து வழங்கியிருந்தார்.
ஜாக்கெட்டில் கோயில்: ஃபரீனாவின் ஜாக்கெட், முதுகுப் பகுதியிலும் கைகளிலும் கோயில் கோபுரத்தின் முகப்பு வடிவமைப்பைக் கொண்டிருந்தது. மேலும், அதில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, அவை எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது ஏற்கனவே ஆடை வடிவமைப்பில் கோயில் கோபுரங்கள் மற்றும் புராணக் கதைகளைப் பயன்படுத்தும் நடிகைகளின் வரிசையில், ஒரு புரட்சிகரமான மாற்றமாகப் பார்க்கப்பட்டது.
பெண்கள் பொதுவாக ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ஜாக்கெட்டுகளை அணிந்திருக்கும் நிலையில், ஃபரீனாவின் அந்த மின்விளக்கு ஜாக்கெட், சில இந்திய பிரபலங்கள் அணியும் வித்தியாசமான உடைகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆடை குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டனர். சிலர் கடுமையான எதிர்ப்புகளையும் தெரிவித்தனர்.
முதுகில் சிங்கம்: அதையெல்லாம் கடந்து தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை ஃபரினா ஆசாத் செய்து வருகிறார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக அவர் தனது முதுகுக்கு மேல் புறத்தில் சிங்கத்தின் முகம் பதித்த டாட்டூவை போட்டுக் கொண்ட வீடியோவை ஷேர் செய்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அதிலும், அந்த சிங்கத்தின் கண்கள் அப்படியே ரியலாக இருப்பதை பார்த்து பலரும் சூப்பர் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











