கார்த்திகை தீபம்.. ஜாக்கெட்டில் கோயிலையும் லைட்டையும் வைத்த ஃபரீனா ஆசாத்.. குவியும் கமெண்ட்ஸ்!

சென்னை: ஏற்கனவே தீபத் தூணில் தீபம் ஏற்றுவது குறித்து மிகப்பெரிய சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தனது ஜாக்கெட்டில் கோயில் டிசைனையும் சீரியல் லைட்டையும் வைத்து பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரீனா ஆசாத் புது புரட்சியை உண்டாக்கியுள்ளார்.

நடிகைகள் சேலைகளில் கோயில் கோபுரங்கள் முதல் புராண கதைகள் வரை ஏற்கனவே டிசைன் செய்து உடுத்த ஆரம்பித்து விட்டனர். அதன்ற்கு எதிர்ப்புகளும், ஆதரவுகளும் குவிந்துள்ளன.

Serial Actress Farina Azad wears Temple design light blouse on Karthigai Deepam
Photo Credit:

ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட்டு காத்து வாங்கிக் கொண்டிருந்த நடிகைகள் இப்போ கோயில் கட்டி கரன்ட் கொடுத்து வைத்துள்ளனர்.

கார்த்திகை தீபம்: மகா கார்த்திகை தீபம் நேற்று தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். சின்னத்திரை பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரது வீடுகளிலும் தீபம் ஏற்றிய புகைப்படங்களும் இணையத்தில் பகிரப்பட்டன. இந்நிலையில், கார்த்திகை தீபம் ஸ்பெஷலாக நடிகை ஃபரீனா ஆசாத் புதுசா ஒரு டிசைன் ஜாக்கெட் போட்ட வீடியோவை தற்போது ஷேர் செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

கோயில் டிசைனில் லைட் வைத்த ஜாக்கெட்: பொதுவாகவே பெண்கள் ஆரி ஒர்க் உள்ளிட்ட ஏகப்பட்ட வேலைப்பாடுகளுடன் ஜாக்கெட் தைத்து போட்டு வருகின்றனர். சேலை விலையை விட ஜாக்கெட் தைக்கும் கூலி அதிகம் என்றும் மீம்ஸ் வருவதை பார்த்து இருக்கிறோம். இந்நிலையில், முதுகு பக்கத்திலும், இரண்டு கை பகுதிகளிலும் கோயிலின் முகப்பு கோபுரம் டிசைனை வைத்து அதில், மின் விளக்குகள் எரிவது போன்ற செட்டப் செய்து நம்ம ஊர் உர்ஃபி ஜாவேத் போலவே மாறிவிட்டார் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா ஆசாத்.

ஷாக் அடிக்காம இருந்தா சரி: படுக்கும் போது பல்பு ஒடஞ்சிடாதா என்றும் ஷாக் அடிக்காதா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். கோயில்களுக்கு செல்லும் போது இதுபோன்ற ஜாக்கெட் அணிந்து சென்றால் நல்லா இருக்கும் என்றும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது என்றும் கூறுகின்றனர். கோயில் கோபுரங்களை கேலி பொருளாக பயன்படுத்துவதை பிரபலங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X