பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வீட்டில் விஷேசம்.. முத்தம் கொடுத்த கணவர்.. 6 மாதத்தில் சர்ப்ரைஸ்!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா, ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்து பிரபலமானவர் கண்மணி மனோகரன். கடந்தாண்டு தொ்குப்பாளர் அஸ்வத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள இந்த ஜோடி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் தெரிவித்துள்ளனர். இதற்கு நெட்டிசன்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் 1000 எபிசோடுகளை தாண்டி சக்கபோடு போட்ட சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த 2019ஆம் ஆண்டு தாெடங்கப்பட்ட சீரியல் பல ட்ரோல்களுக்கும் ஆளானது. அதுவும் விஜய் டிவியில் அதிக நாட்கள் ஓடிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அஞ்சலி என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கண்மணி மனோகரன். அவர் நடித்த முதல் சீரியலும் இதுதான். இந்த சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார்.

serial-actress-kanmani-manoharan-and-anchor-aswath-announce-pregnancy

பாரதி கண்ணம்மா கொடுத்த ஹிட்டுக்கு பிறகு கண்மணி மனோகரன் படு பிஸியாகி விட்டார். பின்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் கடந்த 2022ல் தொடங்கப்பட்டது. சீரியலில் பிஸியாக நடித்து கண்மணி கடந்த ஆண்டு செப்டம்பரில் சன்டிவியில் தொகுப்பாளராக இருக்கும் அஸ்வத்தை திருமணம் செய்துகொண்டார். இதன் பிறகு சோஷியல் மீடியாக்களில் இருவரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அஸ்வத் சன்டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும், பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இளைஞர்களுக்கு பிடித்த தொகுப்பாளராகவும் மாறியிருக்கிறார். தற்போது சன்டிவியில் தொடங்க இருக்கும் புதிய நிகழ்ச்சியை அவர் தாெகுத்து வழங்க இருக்கிறார். இதில், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கியும் பார்ட்னராக களம் இறங்குகிறார். சமீபத்தில் சன்டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி.யில் தனது குடும்பத்துடன் பங்கேற்று கண்மனி மனோகரனை காதலித்தது குறித்து ஓப்பனா பேசினார்.

serial-actress-kanmani-manoharan-and-anchor-aswath-announce-pregnancy

அப்போது மருமகன் தோற்பதை ஏற்காத அஸ்வத்தின் மாமியார் கண்கலங்கினார்.இப்படியொரு மாமியாரா என்று பலரும் வியந்தனர். எனக்கு இப்படி ஒரு மாமியார் கிடைத்திருக்க வேண்டும் என தீனா கலாய்த்தனர். அப்போது கண்மணி மனோகரன் அஸ்வத்தை கொஞ்சுவது போன்ற வீடியோக்களும் வைரலானது. அஸ்வத் - கண்மணி காதல் தம்பதிக்கு திருமணம் முடிந்து 6 மாதங்களை கடந்து விட்ட நிலையில் அதை கொண்டாடும் விதமாக சிங்கப்பூர் சென்றுள்ளனர்., அங்கு இருவரும் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு ரசிகர்களுக்கு செம ஹேப்பியான குட் நியூஸ் ஒன்றை தெரிவித்தனர்.

அதாவது நடிகை கண்மணி கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வயிற்றில் குழந்தையோடு கண்மணி நின்றுகொண்டிருக்க, உற்சாகம் பொங்க வந்து அவரின் வயிற்றில் முத்தமிட்டு தாங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் ஆக உள்ள தகவலை அஸ்வத் அறிவித்திருக்கிறார். சமீபத்தில் இந்த காதல் ஜோடி சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தது. தற்போது கண்மணி கர்ப்பம் என சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் தந்து அவர்களது பெற்றோரை திக்குமுக்காட வைத்துள்ளனர். கண்மணியின் ரசிகர்களும் நீடுழி வாழ்க.. செம ஜோடிப்பா என்றும் கமெண்ட் செய்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X