கண்மணி மனோகரனுக்கு கல்யாணம்.. களைகட்டிய ஹல்தி கொண்டாட்ட போட்டோஸ்!
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்மணி மனோகரனுக்கு தொகுப்பாளர் அஷ்வத்துடன் ஜூன் மாதம் நிச்சயம் நடைபெற்ற நிலையில் இன்று ஹல்தி கொண்டாட்டம் தடபுடலாக நடைபெற்றுள்ளது. அதன் கொண்டாட்ட போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற தொடரான பாரதி கண்ணம்மா சீரியலில், அஞ்சலி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த இந்த தொடரில், அருண் பிரசாத், ரோஷினி ஹரிப்ரியன், கண்மணி மனோகரன்,அகிலன், ரூபா ஸ்ரீ, பரினா ஆசாத் ஆகியோர் நடித்திருந்தனர். 2019ம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர், இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான தொடராக மாறியதை அடுத்து கிட்டத்த ஆறு ஆண்டு ஒளிபரப்பாகி கடந்த ஆண்டு நிறைவடைந்தது.

நடிகை கண்மணி மனோகரன்: இந்த சீரியலில் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த, நடிகை கண்மணி மனோகரன், பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் ஜீ தமிழ் டிவிக்கு மாறினார். அந்த தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளிட்ட சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் பிஸியாக நடித்து வரும், கண்மணி அண்மையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது காதலனை அறிமுகப்படுத்தினார்.

கண்மணியின் வருங்கால கணவர்: இதைத்தொடர்ந்து, ஜூன் மாதம் காதும் காதும் வைத்தது போல,நிச்சயத்தை நடத்தி முடித்துவிட்டு, நிச்சயதார்த்தம் நடந்த போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்திருந்தார். கண்மணியின் வருங்கால கணவர் வேறு யாரும் இல்லை பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில், வணக்கம் தமிழா போன்ற சில ஸ்பெஷல் நிகழ்ச்கிகளை தொகுத்து வழங்கி வரும் அஷ்வத் தான். இருவரும் நீண்ட நாள் காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்,

ஹல்தி கொண்டாட்டம்: இவர்கள் தங்களின் திருமண பத்திரிக்கையை நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து கொடுத்தனர். அதே போல, சூப்பர் ஸ்டார் வீட்டுக்கு சென்ற இவர்கள் லதா ரஜினிகாந்தை சந்தித்து பத்திரிக்கை கொடுத்துள்ளனர். தற்போது இவர்களின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படத்தை கண்மணி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கண்மணி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்திருக்கிறார். அதே போல, அஷ்வத் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். இருவரும் பார்த்துக்கொள்ள வாய்ப்பு இல்லாத போது எப்படி இருக்கும் காதல் மலர்ந்தது என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications