பாரதி கண்ணம்மா சீரியல் ஞாபகம் இருக்கா? க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகையை பாருங்க!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் அஞ்சலி என்ற ரோலில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை கண்மணி மனோகரன் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ந்து இழுக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
நடிகை கண்மணி மனோகரன்: பெங்களூரில் பிறந்த கண்மணி மனோகரன் அங்குள்ள தொலைக்காட்சிகளில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார். அதன் பிறகு விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருந்ததால் பாரதி கண்ணா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருந்தது. அந்த சீரியலைத் தொடர்ந்து அவருக்கு கிடைத்த வரவேற்பால், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்திருந்தார். அதன் பின் மகாநதி தொடர்களில் நடித்தார்.

சினிமாவில் என்ட்ரி: அடுத்தடுத்து சீரியலில் நடித்து வந்த கண்மணி மனோகரன், சன் டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி வரும் அஷ்வத்தை திருமணம் செய்துகொண்டார். கண்மணி - அஷ்வத் தம்பதியினருக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 'துருவ் யாத்ரா அஷ்வத்' என பெயர் சூட்டியுள்ளனர். கர்ப்பமாக இருந்த காலத்தில்கூட சினிமாவில் ஆர்வத்தை விடாமல் நிழல்குடை படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார் கண்மணி. அந்த படம் அவருக்கு நல்ல பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. தற்போது குடும்ப வாழ்க்கை மற்றும் நடிப்பு என இரண்டையும் சமநிலையாக கவனித்து வரும் கண்மணி, அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் எலிகண்டான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
க்யூட் போஸ்: இணையத்தில் எப்போதும் படு ஆக்டிவாக இருக்கும் சீரியல் நடிகை கண்மணி மனோகரன் மென்மையான இளஞ்சிவப்பு நிற டிசைனர் புடவையில் அவர் கொடுத்துள்ள ஸ்டைலிஷ் போஸ்கள் ரசிகர்களை மயக்கி வருகிறது. குறிப்பாக லைட் மேக்கப், க்யூட் எக்ஸ்பிரஷன் மற்றும் எலிகண்டான லுக் ஆகியவை புகைப்படங்களுக்கு தனி அழகை சேர்த்துள்ளது. பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக நடித்த நடிகையாக இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications