Kiruthiga - கணவர் ரொம்பவே பேசிவிட்டார்.. யானைனு சொல்லி உருவ கேலியும் செய்தார்.. நடிகை உச்சக்கட்ட வேதனை
சென்னை: Kiruthiga (கிருத்திகா) சீரியல் நடிகை கிருத்திகா தனது வாழ்க்கையில் நடந்த சோகங்களை எமோஷனலாக கூறியிருக்கிறார்.
மெட்டி ஒலி உ ள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்திகா. அவர் முதலில் ஒரு திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். தற்போது சீரியல் வாய்ப்புகள் கம்மியாகியிருக்கின்றன. இருந்தாலும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தன்னுடைய மகனுடன் சேர்ந்து அவர் போடும் ரீல்ஸ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்ப்பவை. இந்த சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

கிருத்திகா பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஏதாவது தவறு ஒன்று நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்போதுதான் நாம் சில் விஷயங்களை உணர்ந்துகொள்வோம். அந்த சமயத்தில்தான் நாம் யார் என்று நமக்கே தெரியும். என்னுடைய மகன் பிறந்த பிறகு உடல் எடை கிட்டத்தட்ட 83 கிலோவரை ஏறிவிட்டது. அதனால் நான் 3 வருடங்கள் நடிக்கவே இல்லை.
இல்லத்தரசி: நான் நடிக்காமல் இருந்தபோது இல்லத்தரசியாகவே இருந்தேன். அப்போதுதான் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இடையே அடிக்கடி நிறைய பிரச்னைகள் வர ஆரம்பித்தன. ஒருகட்டத்தில் அது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டது என்பது வேதனை. அதனை தொடர்ந்து நிறைய சூழ்நிலைகள் உருவாகின. எனவே மீண்டும் நடித்து ஆக வேண்டும் என்ற நிலை உருவானது.
வாய்ப்பு தேடவில்லை: நடித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருந்தாலும் நானாக சென்று யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை. நான் ஏற்கனவே பணியாற்றிய மெட்டி ஒலி சீரியலின் தயாரிப்பு நிறுவனமே அதுவாக முன் வந்து எனக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முடிவு செய்து அதன்படியே செய்தேன்.
மீண்டும் சன் டிவியில்: மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் சன் டிவியில் நடித்தேன். அப்போதுதான் ரொம்பவே குண்டாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரிந்தது. இதனையடுத்து தயாரிப்பாளரிடம் இதைப்பற்றி சொன்னேன். ஆனால் அவரோ இந்தக் கதாபாத்திரம் இந்த உடல் தோற்றத்துக்கு ஒத்துப்போக்கும் என்று கூறி என்னை சமாதானம் செய்தார். ஆனால் நான் ரொம்பவே குண்டாக இருக்கிறேன் என்பது எனக்கு அப்பட்டமாக தெரிந்தது.
யானை மாதிரி: உடல் எடை கூடியிருந்ததால் நிறைய நெகட்டிவ்வான கமெண்ட்டுகளை சந்தித்தேன். யானை மாதிரி இருக்கிறாய். உனக்கெல்லாம் நடிப்பு தேவையா என்றெல்லாம் கமெண்ட்டுகள் வந்தன. இது போதாது என்று என்னுடைய முன்னாள் கணவரும் ஒரு சண்டையின்போது எடையை உடல் எடை பற்றி பேசி காயப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, நான் என்னுடைய எடையை குறைத்தே ஆக வேண்டுமென முடிவு செய்தேன். அப்படி 2018ஆம் ஆண்டு ஃபிட்னஸில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 2020ஆம் ஆண்டு 83 கிலோவிலிருந்த நான் 60 கிலோவுக்கு மாறினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











