ஊறுகாய் விற்கும் பிரபல நடிகை.. வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்!
சென்னை: சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமி புதிய தொழிலை தொடங்கி உள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமான மகாலட்சுமிக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து பல சீரியல்களில் லீட் ரோலிலும் வில்லியாகவும் நடித்து வருகிறார். மகாலட்சுமி ஏற்கனவே அனிலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகு மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி, 2022 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற்றது.

நடிகை மகாலட்சுமி: இவர்களின் திருமண இணையத்தில் பெரும் சர்ச்சை கிளப்பியது. இதையடுத்து இருவரும் சேர்ந்து பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்தனர். அதில், கல்யாணம் பண்ணினா நிச்சயமா உருவகேலி இருக்கும்ன்னு எனக்கு நல்லா தெரியும். அதனால ஒரு வருஷம் டைம் எடுத்து உடம்ப குறைச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைச்சேன். எங்க அம்மாவுக்கு உடன்பாடு கிடையாது. ஆனால், மகாலட்சுமி என்னை ரொம்ப நம்பினா,என் மேல அதிகபடியாக உறுதி இருந்தார். அதனால நிஜமாவே உடம்ப குறைக்கலாம்ன்னு யோசிச்சேன்.
மகாலட்சுமி சொன்னது: அதுக்கு 1 வருஷம் டைம் கேட்டதுக்கு மகாலட்சுமி உள்ளத்துல இருந்து சொன்ன வார்த்தை என்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. நீங்க எது பண்ணாலும் என்னை கல்யாணம் பண்ணிட்டு பண்ணுங்க. உடம்ப குறைக்கணுமா, வெளிநாடு போகணுமா பண்ணுங்க, கூட நானும் இருப்பேன் என்றால். அதன்பிறகு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இருவரும் இரண்டு வருடம் காதலித்தோம். ஆனால், யாருக்குமே தெரியாது. நாங்கள் இதுவரை வெளியில் சந்தித்துக்கொண்டதே இல்லை என்றார். இப்படி திருமணம் குறித்து, பல தரப்பில் இருந்து விமர்சனம் வந்தாலும், அனைத்து விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், மகாலட்சுமியும் ரவீந்தரும் தற்போது மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகின்றனர். அடிக்கடி இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதிய தொழில்: இந்த நிலையில், நடிகை மகாலட்சுமி புதிய தொழில் ஒன்றை தொடங்கி உள்ளார். அதாவது "GRANDMA'S MAGIC" என்கிற பெயரில் ஊறுகாய் வியாபாரத்தை தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும் அதில், இன்று தொடங்கும் ஒரு கனவு..என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். "GRANDMA'S MAGIC" என்பது வெறும் ஒரு பிராண்ட் மட்டுமல்ல, அது என் தாயின் நீண்ட நாள் கனவு. அவருக்காக இந்தச் சிறிய அடியை எடுத்து வைப்பது என் இதயத்தை நன்றியுணர்வால் நிரப்புகிறது. ஆனால் இந்த பயணம் என்னை விடப் பெரியது. என் நம்பிக்கை மட்டும் போதாது. இந்தச் சிறிய கனவு வளர்ந்து பிரகாசிக்க, உங்கள் அன்பும், ஆதரவும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் தேவை என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை கூறியதுடன், ஆர்ட்டர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











