Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புது கணவருடன் அப்டி இப்டி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ.. நெட்டிசன்ஸ் கேட்ட 'அந்த' கேள்வி!
Recommended Video
சென்னை: நடிகை மைனா நந்தினி தனது புது கணவருடன் ஆட்டம் போட்டுள்ள டிக்டாக் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அந்த சீரியலில் மைனா என்ற பெயரில் நடித்ததால் மைனா என்றே புகழ்பெற்றார்.
இதனால் அவரது பெயருக்கு முன்னால் மைனா ஒட்டிக்கொள்ளா மைனா நந்தினியாகிவிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், சீரியல் நடிகை என பிஸியாக இருந்துவரும் மைனா நந்தினி அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.
கருத்து வேறுபாடு
ஏற்கனவே ஜிம் நடத்தி வந்த கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்தார் நந்தினி. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.
இரண்டாவது திருமணம்
இதனால் ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினியின் கணவர் கார்த்திகேயன் லாட்ஜில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து சில மாதங்கள் வெளியே தலைக்காட்டாமல் இருந்த நந்தினி அண்மையில் சீரியல் நடிகர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
புது கணவருடன்
இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தனது புது கணவருடன் நந்தினி மைனா செமயாக ஆட்டம் போட்டிருக்கும் டிக்டாக் வீடியோவும் வெளியாகியிருக்கிறது.
மாறி மாறி முத்தம்
அதில் ஆடி கார் வேண்டும் என மாப்பிள்ளை அடம்பிடிப்பது, மன்னன் பட மியூஸிக்கிற்கு மரத்தடியில் அமர்ந்து இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்து கொள்வதுமாய் உள்ளனர். மேலும் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற காந்த கண்ணழகி பாடலுக்கு நடனமாடுவதாகவும் உள்ளது.
நெட்டிசன்ஸ் ரியாக்ஷன்
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் மைனா நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் சிலர், வருடத்திற்கு ஒரு கணவரா என்றும், இவரையாவது விவாகரத்து செய்யாமல் கடைசி வரை வாழுங்கள் என தெரிவித்துள்ளனர்.