Sevvanthi serial: செவ்வந்தி சீரியலில், திவ்யாவுடன் மோதும் நட்சத்திரா.. சபாஷ் சரியான போட்டி!

சென்னை: சன் டிவி சீரியல் என்றாலே, பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. மக்களை உட்கார்ந்த இடத்திலேயே கட்டி போடும் வித்தயை சன் டிவி மிகச் சரியாக சொல்லி அடிக்கும். சன் டிவியில் தினமும் காலை 11.30க்கு ஒளிபரப்பாகும் மக்கள் மனதை கொள்ளை அடித்த செவ்வந்தி சீரியலில், அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களை சீரியல் தரப்பினர் செய்து வருகின்றனர். இந்த சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர். அர்ணவுடன் ஏற்பட்ட பிரிவை தொடர்ந்து இவர் தற்போது இந்த சீரியலில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இந்த சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சீரியலை சுவாரஸ்யமாக்கும்வகையில் அடுத்தடுத்த விஷயங்களை சீரியல் தரப்பு களமிறக்கி வருகிறது. இந்த சீரியல் 500 எபிசோட்களை கடந்த நிலையில், கண்டிப்பாக 1000 எபிசோட்களை கடந்து சாதிக்கும் என்று சீரியல் தரப்பினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இதற்கேற்ப இந்த சீரியலில் அடுத்தடுத்த நடிகர், நடிகைகளை களமிறக்கி வருகின்றனர். இந்த சீரியலில் நாயகியாக பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு வெற்றி நடைபோடும் கேரக்டரில் திவ்யா ஸ்ரீதர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருக்கு சிறப்பாக கைகொடுக்கும் கணவர் மனோகர் மற்றும் நண்பர் கார்த்திக் ஆகியோரும் சீரியலில் அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்.

Serial Actress Natchathra joined in Sun tv s Sevvanthi serial

செவ்வந்தி சீரியல்: சன் டிவியில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சிறப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது செவ்வந்தி சீரியல். தினந்தோறும் பகல் 11.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. 500 எபிசோட்களை தாண்டி ரசிகர்களை கவர்ந்துவரும் இந்த சீரியல் விரைவில் எண்ட்கார்ட் போடவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால், இந்த சீரியல் கண்டிப்பாக 1000 எபிசோட்களை கடந்து ரசிகர்களை கவரும் என்று சீரியல் தரப்பு அறிவித்தது. தொடர்ந்து அதை நோக்கிய பயணமாக தற்போது சீரியல் நடைபோட்டு வருகிறது. இந்த சீரியலில் கதையின் நாயகியாக திவ்யா ஸ்ரீதர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

நடிகை திவ்யா ஸ்ரீதர்: செவ்வந்தியாக திவ்யா ஸ்ரீதர் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போடும் நிலையில் அவருக்கு உறுதுணையாக கணவர் மனோகர் மற்றும் நண்பர் கார்த்திக் ஆகியோரும் இந்த சீரியலில் கவனம் ஈர்த்து வருகின்றனர். சீரியலில் செவ்வந்தி மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்து வருவதுபோலவே, நிஜத்திலும் இந்தக் கதையின் நாயகி திவ்யா ஸ்ரீதரும் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். அர்ணவுடனான பிரிவிற்கு பிறகு இவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் அதிகமான கவனத்தை செலுத்தி வருகிறார் திவ்யா ஸ்ரீதர்.

செவ்வந்தியில் இணையும் நட்சத்திரா: இந்நிலையில் செவ்வந்தி சீரியலில் அதிரடியாக நுழைந்து மாஸ் காட்ட வருகிறார், யாரடி நீ மோகினி புகழ் நட்சத்திரா. ஏற்கனவே டிஆர்பியில் கலக்கி வரும் இந்த சீரியலில், புதிய வரவாக நட்சத்திராவை அழைத்து வந்து உள்ளார்கள். இனி தான் தரமான சம்பவம் காத்திருப்பதாக சன் டிவி தரப்பிலும், தயாரிப்பு நிறுவனம் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. திவ்யா ஸ்ரீதர் மற்றும் நட்சத்திரா காம்பினேஷன் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை தருவார்கள் என்று தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்: பகல் நேரங்களில் குடும்பத்தில் உள்ள பெண்களை கவரும்வகையில் செவ்வந்தி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக இந்த சீரியல் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இந்த சீரியல் அடுத்தடுத்த விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிப்பரப்பாக உள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இந்த சீரியல் இன்னும் அதிகமான டிஆர்பி புள்ளிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X