விதவிதமாய் வித்தியாசமாய்.. ஜன்னல் வெச்ச ஜாக்கெட்டில் ஜொலிக்கும் நடிகை!
சென்னை: தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. தொடர்ந்து சில சீரியலில் நடித்து வந்த இவரை இப்போது சீரியலில் பார்க்க முடியவில்லை. ஆனால் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தினுசு தினுசாக ஜாக்கெட்டுகளை போட்டு இணையத்தை கலக்கி வருகிறார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. பெரும் வரவேற்பை பெற்ற அந்த சீரியலில் நடித்த வாணி போஜனைத் தவிர வேறுயாரும் பெரிய அளவிற்கு பிரபலமாக வில்லை. தெய்வமகள் சீரியலை தொடர்ந்து, வேறு எந்த சீரியலிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிகை நிவிஷா: இதன் பின், இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிவிஷா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்தார். மலர் சீரியலில் நடிகை நிவிஷாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்த நிலையில், சீரியலிலிருந்து நடிகை நிவிஷா விலகினார்.
இணையத்தில் ஆக்டிவ்: தற்போது எந்த சீரியலிலும் தென்படாத நிவிஷா, தொடர்ந்து போட்டோஷூட் எடுத்து அந்த போட்டோஸை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்து வருகிறார். உடல் எடை அதிகரித்து காணப்பட்ட நிவிஷா, கடுமையாக உடல் பயிற்சி செய்து தனது உடலை கணிசமாக குறைத்து உள்ளார். இன்ஸ்டாகிராம் 18.2K பாலோவர்களை வைத்து இருக்கும் இவருக்கு, மார்டன் உடையை விட சேலை மிகவும் பொருத்தமாக இருக்கிறது.
இப்படி ஒரு ஜாக்கெட்டா: நிவிஷா அணிந்து வரும் சேலையைவிட, அந்த சேலைக்கு ஏற்றபடி அவர் போடும் ஜாக்கெட்டுத்தான் ஹைலைட்டே, மெருன் நிற சேலைக்கு எடுப்பாக, அதே நிற ஜாக்கெட் போட்டுள்ளார். மேலும், அந்த ஜாக்கெட்டில், அவரின் பின் முதுகின் அழகு அப்பட்டமாக தெரியும்படி, அப்படியே, கயிற்றால் குறுக்கும் நெடுக்குமாக அழகுப்படுத்தி உள்ளார்.
பளிங்கு முதுகு: மற்றொரு போட்டோவில் பச்சை நிற புடவைக்கு ஏற்றால் போல, கோல்டன் நிறத்தில் பிளவுஸ் போட்டுள்ளார். அதில், பளிங்கு போல இருக்கும் அவரின் முதுகு அழகாக தெரிகிறது. இதுமட்டுமில்ல இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கும் என்பது போல, நீல நிற பட்டுப்புடவைக்கு, அதே ஜாக்கெட்டில் ஜன்னல் வைத்துள்ளார். இந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் லைக்குகளை குவித்து வருகின்றனர். தற்போது எந்த சீரியலிலும் நடிக்காத நிவிஷா, விரைவில் சீரியல் மூலம் பார்க்கவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











