பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல சீரியல் நடிகை? யாருன்னு பாருங்க.. சூடான தகவல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை பங்கேற் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை தமிழில் நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது.

100 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. 115 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தான் நிறைவடைந்தது.

பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை

பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க நிகழ்ச்சி குழு முடிவு செய்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் மராமத்து பணிகளை தொடங்கிய நிகழ்ச்சி குழு, நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க வைக்க பல பிரபலங்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தியது.

லாக்டவுனால் தள்ளிப்போன பிக்பாஸ்

லாக்டவுனால் தள்ளிப்போன பிக்பாஸ்

ஆனால் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தலால் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா குறைந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடங்கும் பணிகள் சூடுபிடித்துள்ளன.

விரைவில் வெளியாகும் டீசர்

விரைவில் வெளியாகும் டீசர்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான டீசர் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. நடிகர் கமல்ஹாசன் கேமராவுக்கு முன்பு நின்றிருந்த போட்டோக்கள் வெளியானது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான டீசர் விரைவில் வெளியாகும் என்றும் அதனை தொடர்ந்து ட்ரெயிலர் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை

பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை

இதனிடையே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கட்டுப்பாடுகளும் விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது என்றும் விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக 30 பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

சீரியல் நடிகை பவானி ரெட்டி

சீரியல் நடிகை பவானி ரெட்டி

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக சீரியல் நடிகை ஒருவரின் பெயர் அடிபட்டு வருகிறது. அதாவது தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்த பவானி ரெட்டியின் பெயர்தான் அது. பவானி ரெட்டி தமிழ் சினிமாவிலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஒரு வருடத்திலேயே கணவர் தற்கொலை

ஒரு வருடத்திலேயே கணவர் தற்கொலை

இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். சக சீரியல் நடிகரான பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பவானி ரெட்டி. ஒரு வருடத்திலேயே கணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆபாச காட்சிகளில் நடித்த பவானி ரெட்டி

ஆபாச காட்சிகளில் நடித்த பவானி ரெட்டி

தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவர் 'இனி அவனே' என்ற படத்தில் ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வைரலானது.

பிக்பாஸ் சீசன் 5 ல் பவானி ரெட்டி

பிக்பாஸ் சீசன் 5 ல் பவானி ரெட்டி

இந்நிலையில் நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து நிகழ்ச்சி குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அதற்கு பவானி ரெட்டி ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X