Priyanka: ரோஜா சீரியல் பிரியங்காவிற்கு பிடித்த நாயகி யார் தெரியுமா.. அவங்களே சொல்லியிருக்காங்க!
சென்னை: ரோஜா சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் பிரியங்கா நல்காரி. இவரது கொஞ்சல் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தொடர்ந்து ஜீ தமிழில் சீதாராமன் என்ற தொடரிலும் மாமியாரிடம் மல்லு கட்டும் கேரக்டரில் கலக்கலான நடிப்பை கொடுத்திருந்தார் பிரியங்கா.
சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், மலேசியாவிற்கும் சென்னைக்கும் மாறி மாறி பயணம் மேற்கொண்டு சீரியலில் நடித்து வந்தார்.

ரோஜா சீரியல் புகழ் பிரியங்காவிற்கு பிடித்த நாயகி: சன் டிவியில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பான சீரியல் ரோஜா. இந்தத் தொடரில் சிபு சூரியனுக்கு ஜோடியாக ரோஜா கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை குறிப்பாக இல்லத்தரசிகளை கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. அர்ஜூன் சார் என இவர் கூப்பிடும் அழகிற்காகவே இந்த சீரியலை பார்த்தவர்கள் ஏராளம். அந்த வகையில் சிறப்பாக சென்றுக் கொண்டிருந்த ரோஜா சீரியல் கடந்த ஆண்டில் நிறைவடைந்தது.
தொடர்ந்து ஜீ தமிழின் சீதாராமன் என்ற தொடரிலும் லீட் கேரக்டரில் சீதாவாக களமிறங்கிய சில வாரங்களிலேயே ரசிகர்களை கவர்ந்து அவர்களை இதயச்சிறையில் அடைத்தார். ஒரு பெண்ணின் அழகு அவளது மனதில்தான் உள்ளது, முகத்தில் இல்லை என்ற கான்செப்டை கதைக்களமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரிலும் பிரியங்கா சிறப்பாக ஸ்கோர் செய்து, சீரியலை டிஆர்பியிலும் முன்னேற்றினார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மலேசியாவில் பணிபுரிந்துவரும் ராகுல் என்பவருக்கும் மலேசியா முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மலேசியா டூ சென்னை அடிக்கடி பயணம் செய்து சீரியலில் நடித்து வந்தார் பிரியங்கா. இந்நிலையில் என்ன நினைத்தாரோ என்னவோ, சீரியலில் இருந்து விலகி, கணவருடன் மலேசியாவில் செட்டில் ஆகப் போவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்து, தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சினிமாவில் மிக மிக அவசரம் படத்தில் நடித்த ஸ்ரீ பிரியங்கா தற்போது சீதாவாக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு பதிலாக சீரியலில் நடிக்கும் பிரியங்காவிற்கு தனக்கு அளித்ததை போலவே சப்போர்ட் செய்ய வேண்டும் என்று பிரியங்கா நல்காரி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ மூலம் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் பிரியங்கா தொடர்ந்து தன்னுடைய மற்றும் தன்னுடைய கணவரின் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி குறித்தும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார். தனக்கு, தன்னைதான் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். மலேசியாவில் பிரியங்காவிற்கு தன்னுடைய கணவர் மற்றும் தன் வீட்டு நாய்க்குட்டி தான் மிகவும் பேவரைட்டாக உள்ளனர். இவர்களின் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் பிரியங்கா. தான் தன்னுடைய கணவருடன் ஹாலிடே ட்ரிப்படித்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











