Raveena Daha: ரெட் கார்டு விவகாரம்.. ஒரு வருடம் வீணாப்போச்சா? நடிகை ரவீனா விளக்கம்!
சென்னை: நடிகை ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக ஜில்லா, ராட்சசன், தீரன் அதிகாரம் ஒன்று என வெற்றிப்பெற்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சீரியல்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவருடம் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இதுகுறித்து ரவீனா விளக்கம் அளிதுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய நடிகை ரவீனா தாஹா, ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த சீரியலைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்தார். குறிப்பாக இவர், விசித்ரா போல மேக்கப்போட்டு வந்து, அவரைப்போல பேசுவது, நடப்பது என செய்து காட்டி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார். அதைத்தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்ட இவர் 91 நாட்கள் வரை தாக்குப்பிடித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, பிக் பாஸ் ஜோடிகள் கலந்து கொண்ட 'ஜோடி ஆர் யூ ரெடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வென்றிருந்தார்.

நடிகை ரவீனா தாஹா: பின் சிந்து பைரவி சீரியலில் ரவீனா கமிட்டாகி இருந்தார். இந்த சீரியலுக்கான ப்ரோமோவும் வெளியாகி தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகை ரவீனா, அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக, சீரியல் தயாரிப்பாளர்கள், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர் ரவீனா மீது புகார் கொடுத்ததை அடுத்து, அவருக்கு ரெட் கார்டடு கொடுக்கப்பட்டதாகவும், அவர் ஒருவருடத்திற்கு எந்த சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதற்கேற்ப ரவீனாவும் டிவி நிகழ்ச்சிகளிலுமே, சீரியல்களிலுமே தலை காட்டாமல் இருந்தார்.
ரவீனா விளக்கம்: இணையத்தில் கட்டுத்தீ போல பரவி வரும் இந்த செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ரவீனா தாஹா, அந்த சீரியலின் கதையை சொல்லும் போது எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக இருந்தது. ஆனால், அந்த கதையில் மேலும், ஒரு நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருந்ததால், சீரியலை விட்டு விலகிவிட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், ரவீனா தாஹா, தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில், அது என தனிப்பட்ட விருப்பம் என்று கூறியிருந்தார். மேலும், தன் மீதான புகார் தெரிவிக்கப்பட்டது உண்மைதான் என்றும், அதற்காக சீரியல்களில் நடிப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்றும் அந்த பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் நடிகை ரவீனா கூறியிருந்தார்.
நடிகை ரவீனா சீரியலில் நடிப்பதை விட, இன்ஸ்டாகிராமில் விதவிதமான பாட்டுக்கு ஆட்டம் போட்டு லைக்குகளை குவித்து வருகிறார். இவரின் ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே தனிக்கூட்டம் ஒன்று உள்ளது. அதுமட்டுமில்லாமல், ரவீனா, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளதால், ரவீனாவின் ரசிகர்கள், திரையில் அவரின் ஆட்டத்தை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











