Reehana: எனக்கு 10 புருஷன் இருந்தா உனக்கு என்னடா? மட்டமான புடவை விற்பனை.. விளாசிய ரிஹானா!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை ரிஹானா பேகம் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு பெரும் புயலை கிளப்பி இருக்கிறார். அது பெரும் பேசுபொருளாக இருக்கும் நிலையில் தற்போது Tamil Movie World Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், நவம்பர் 7ஆம் தேதி லக்ஷ்மி புட்டிக்கு என்ற புடவை விற்கும் நிறுவனத்திடம் இருந்து ஐந்து புடவைகளை ஆர்டர் சேர்ந்திருந்தேன். அதற்கு முன்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல புடவைகளை ஆர்டர் செய்திருந்தேன். அதில், ஒரு சில புடவைகளில் டேமேஜ் இருந்ததால், அதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அவர்களிடம் புகார் கூறியிருந்தார். ஆனால், அதற்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை. அதன் பிறகு மீண்டும் லட்சுமி புட்டிக்கின் புடவை விளம்பரத்தை பார்த்து மீண்டும் ஐந்து புடவைகளை ஆர்டர் செய்திருந்தேன். ஆனால், இந்த முறையும் வந்த புடவையிலும் பல டேமேஜ்கள் இருந்ததால் அதை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு இருந்தார்.

ஆபாசமாக பேசினார்: அதே தொடர்ந்து, இதையடுத்து, அந்த நிறுவனத்தில் இருந்து ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவர் இந்த புடவைக்கு பதிலாக வேறு ஒரு புடவையை அனுப்பி வைக்கிறோம். அந்த வீடியோவை டெலிட் செய்யுங்கள் என சொல்லி இருந்தார். அடுத்த புடவை அனுப்புங்கள் நான் பார்த்துவிட்டு டெலிட் செய்கிறேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால், அவர்கள் மாற்றி அனுப்பிய புடவையிலும் பல ஓட்டைகள் இருந்ததால், அதை நான் இன்ஸ்டாகிராம் நேரலையில் காட்டிவிட்டேன். அதன்பின் என்னை தொடர்பு கொண்ட அந்த நிறுவனத்தில் இருக்கும் ஒருவர், நீங்கள் வேண்டுமென்றே எங்களுடைய நிறுவனத்தின் பெயரை கெடுக்கிறீர்கள் என்று கூறினார். அது மட்டும் இல்லாமல், ஆபாசமாக ரீல்ஸ் போடுகிறீர்கள் இந்த வீடியோ குழந்தைகள் பார்க்க முடியுமா என்றும், ஒரு கணவரோடு வாழும் பெண்கள் ரீல்ஸ் போட மாட்டார்கள் பல கணவரோடு வாழ்பவர்கள் தான் ரிலீஸ் போடுவார்கள் என்று பேசி இருக்கிறார்.
எனக்கு 10 புருஷனா: நான் டிக் டாக் இலக்கியா போல உடம்பை காட்டி ஆபாசமாக ரிலீஸ் போடுகிறேனா? ஒரு புடவை விற்கும் நிறுவனம் புடவை பற்றி யாராவது குறை கூறினார். அதைப்பற்றி மட்டும்தான் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு உனக்கு எத்தனை புருஷன் என்று ஆபாசமாக கேட்கலாமா? இவர்கள் டார்ச் அடித்து பார்த்தார்களா? தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இவர்கள் பேசுவதற்கான காரணம் என்ன அந்த நபர் பேசிய அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் உரிய பதில் அளிக்காமல் அவர்களை நான் சும்மா விடமாட்டேன் என்று ரிஹானா பேகம் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











