குறும்புத்தனம் என் கூடப்பிறந்தது: சீரியல் நடிகை ஷப்னம்

By Mayura Akilan

சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தெய்வ மகள்' சீரியலில் அப்பாவித்தனம் கலந்த குறும்புப் பெண்ணாய் நடித்து ரசிகர்களை பெற்றுள்ளவர் ஷப்னம். ஹீரோயினின் தங்கை 'தாரணி' கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷப்னம் இயற்கையிலேயே துறுதுறுப்பான பெண்தானாம்.

குறும்புத்தனமும், சுட்டித்தனமும் என் கூடப்பிறந்தது என்கிறார் ஷப்னம். இந்த கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ஷாப்பிங் போகும் இடங்களில் கூட பாராட்டு கிடைத்துள்ளதாம். தன்னுடைய சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.

தம்பி கூட சண்டை போடுவோன்

தம்பி கூட சண்டை போடுவோன்

என்னோட குடும்பம், அம்மா, அப்பா, தம்பினு குட்டிக் குடும்பம்.'எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் பாசப் பெற்றோர். தம்பி ஆஷிக், பயங்கர வாலு. வீட்டுல எல்லாரும் சேர்ந்து என் சீரியல்களை பார்த்துட்டு இருக்கப்போ... ஸ்கிரீன்ல என்னைப் பார்த்ததும், 'ப்ப்ப்பா... யார்டா இந்தப் பொண்ணு? இவ்ளோ மேக்கப்... பேய் மாதிரி!'னு சொல்லி கடுப்பேத்துவான். அவன்கூட சண்டை போடுறதுல எனக்கு அளவில்லா சந்தோஷம்!''

பத்தாவது படிக்கும் போதே

பத்தாவது படிக்கும் போதே

எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் போதே சீரியலில் நடிக்க வந்துவிட்டேன். சன் டி.வியின் 'கல்லூரிக் காலம்' சீரியல்தான் என்னோட சின்னத்திரை என்ட்ரி.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்

நிகழ்ச்சித் தொகுப்பாளர்

அடுத்து வசந்த் டி.வி 'டாப் ஸ்டார் சிங்கர் ஜூனியர்' நிகழ்ச்சி ஆங்கரா தாவினேன். தொடர்ந்து விஜய் டி.வி 'மீரா', கலைஞர் டி.வி 'உறவுக்கு கை கொடுப்போம்', கே.டி.வி 'ஆல் இன் ஆல் அலமேலு' போன்ற சீரியல்களில் நடித்தேன்.

பரபரப்பான வாழ்க்கை

பரபரப்பான வாழ்க்கை

ஜீ தமிழ் சேனல் 'மை நேம் இஸ் மங்கம்மா', சன் டி.வி 'முத்தாரம்', 'மருதாணி', 'தெய்வ மகள், உதிரிப்பூக்கள்னு பரபரப்பா போயிட்டிருக்கு. வீட்டில் நடிப்பதற்கு ரொம்பவும் தடையிருந்தது. அதை எல்லாம் தாண்டி நடிக்க வந்திருக்கிறேன் என்றால் அதற்கு என் ஆர்வம்தான் காரணம்.

தோழிகளை மிஸ் பண்றேன்

தோழிகளை மிஸ் பண்றேன்

சென்னை, எம்.ஜி.ஆர் யுனிவர்ஸிட்டியில் ரெண்டாம் வருஷம் பி.டெக் படிச்சுட்டிருக்கேன். 'ஷூட்டிங் ஷெட்யூல்களுக்கு நடுவுல என் ஃப்ரெண்ட்ஸை ரொம்பவே மிஸ் பண்றேன் என்று வருத்தப்பட்டு பேசினார் ஷப்னம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X