Shruthi: கணவர் அரவிந்தின் முதலாண்டு நினைவுதினம்.. சீரியல் நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா உருக்கம்!
சென்னை: நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா சன் டிவியில் ஒளிபரப்பாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தவர். பள்ளி மாணவியாக இருந்தபோதே இந்த சீரியலில் நடிக்க துவங்கிய ஸ்ருதி தொடர்ந்து அடுத்தடுத்து வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்டார்.
மேலும் சீரியல்களில் நடித்துக் கொண்டே கல்லூரி படிப்பையும் நிறைவு செய்தார். இதனிடையே கடந்த 2022ம் ஆண்டில் தன்னுடைய நீண்ட நாள் காதலரான அரவிந்தை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இன்றைய தினம் அவரது முதல் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை ஸ்ருதி வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா: சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை சென்றடைந்தவர் நடிகை ஸ்ருதி ஷண்முகப்பிரியா. தொடர்ந்து வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர், சீரியல்களில் நடித்துக் கொண்டே தனது கல்லூரி படிப்பையும் முடித்தார். கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்தில் தனது நீண்ட நாள் காதலர் அரவிந்தை சுருதி ஷண்முகப்பிரியா திருமணம் செய்து கொண்டார். ஸ்ருதியின் கணவர் அரவிந்த் ஒரு பாடி பில்டர். தன்னுடைய பிட்னசில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர், ஸ்ருதியை திருமணம் செய்த நிலையில் இவர்களது திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அரவிந்த் மறைவு: திருமணத்திற்கு பிறகு ஸ்ருதி மற்றும் அரவிந்த் இருவரும் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தனர், இதன்மூலம் ஏராளமான ஃபாலோயர்களையும் பெற்ற நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரவிந்த் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். கல்யாணம் ஆன ஒரே வருடத்தில் அரவிந்த் உயிரிழந்ததை அடுத்து ஸ்ருதி மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி வீட்டிலேயே முடங்கினார். அரவிந்தின் மரணம் ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
முடங்கிய ஸ்ருதி: கணவரின் மறைவிற்குப் பிறகு சோசியல் மீடியா மற்றும் சின்னத்திரை என எதிலுமே தலை காட்டாமல் ஸ்ருதி வீட்டில் இருந்த நிலையில் கணவர் குறித்து தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களை அவர் உருக்கமாக பேசி வந்தார். இந்நிலையில் மீண்டும் சீரியல்களில் ஸ்ருதி ஷண்முகப்பிரியா நடிக்க துவங்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி சீரியலில் ஹீரோயினின் தோழியாக விஜி என்ற ரோலில் இவர் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ராஜ் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் சூழலில் ஸ்ருதி, மகாலட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வரும் ஸ்ருதிராஜுக்கு தோழியாக விஜி என்ற கேரக்டரில் அவருக்கு மிகவும் சப்போர்ட் செய்யும் தோழியாக நடித்து வருகிறார்.
அரவிந்த் முதலாண்டு நினைவுதினம்: ஸ்ருதி ஷண்முகப்பிரியாவின் இந்த ரீ-என்ட்ரிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் தனது கணவரின் முதல் ஆண்டு நினைவை ஒட்டி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். தன்னுடைய உயிர் உள்ளவரை தான் அரவிந்தின் ஸ்ருதி என்றும் அதேபோல அரவிந்த் தன்னுடையவர் என்றும் அவர் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அரவிந்தின் உடல் மட்டுமே தன்னை விட்டு பிரிந்ததாகவும் அவருடைய ஆத்மா தன்னுடனேயே தொடர்ந்து இருப்பதாகவும் ஸ்ருதி தன்னுடைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார். தான் எங்கு சென்றாலும் அரவிந்தின் புகைப்படத்தை தன்னுடனே எடுத்துச் செல்லும் வழக்கத்தை ஸ்ருதி தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











