மடியில் உட்கார சொன்னார்.. தவறாக நடக்க முயன்றார்.. புது சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீநிதி !

சென்னை : சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர்.

அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது சின்னத்திரை பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு, சர்ச்சை நாயகியாக மாறியுள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீநிதி, பட வாய்ப்பு தருவதாக கூறி பிரபல சேனலில் பெரிய பதவியில் இருக்கும் நபர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக புகார் கூறியுள்ளார்.

சீரியல் நடிகை ஸ்ரீநிதி

சீரியல் நடிகை ஸ்ரீநிதி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் குழந்தை பருவத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக

இணையத்தில் ஆக்டிவாக

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இந்த நடிகை, அவ்வப்போது போட்டோஷூட்டுகளை நடத்தி புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் இவர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் குறித்து எக்குத்தப்பா கமெண்ட் அடித்திருந்தார். இதனால், அஜித் ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்தனர்.

சிம்பு என்னை காதலிக்கிறார்

சிம்பு என்னை காதலிக்கிறார்

இதையடுத்து, சிம்பு தன்னை காதலிப்பதாக புதிய சர்ச்சையை கிளப்பி இருந்தார். மேலும், நான் சிம்புவை காதலிக்கவில்லை என்றும். சிம்பு தான் என்ன லவ் பன்றாரு என்று கூறி இருந்தார். இதனால் கடுப்பான சிம்பு ரசிகர்கள் ஸ்ரீநிதியை திட்டிதீர்த்தனர்.

மனதளவில் பாதிப்பு

மனதளவில் பாதிப்பு

அதுமட்டும் இல்லாமல், நெருங்கிய தோழி நட்சத்திராவைனப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், நட்சத்திரா ரொம்ப கஷ்டப்பட்டு சினிமா துறைக்கு வந்து இருக்கா, அவ நிறைய தப்பான விஷயங்கள் செய்து இருக்கா, ஆனா அவ தப்பான பொண்ணு கிடையாது பதிவிட்டுவிட்டு பின்னர் அதை டெலிட்டும் செய்திருந்தார். இவரின் இந்த செயல்களை எல்லாம் பார்க்கும் போது ஏதோ மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.

Recommended Video

எனக்கு First Simbu வேணும் - STR வீட்டிற்கு முன் அடம்பிடித்த Sreenidhi |Filmibeat Tamil
மடியில் உட்கார சொன்னார்

மடியில் உட்கார சொன்னார்

இந்நிலையில், ஸ்ரீநிதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒரு ஷோ பற்றி பேச வேண்டும் என சொல்லி தன்னை ஆபிசுக்கு அழைத்தார்கள். ஆனால், ஆபிஸ் போல தெரியவில்லை வீடு போல இருந்தது. நான் தயக்கத்துடன் உள்ளே சென்றேன். உள்ளே சென்று பார்த்த போது, ஆபிஸ் போல இருந்தது. அப்போது, அந்த சேனலின் தலைவர் என்னை அவர் மடியில் உட்கார சொன்னார்.மேலும், என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன், கீழே நண்பர்கள் இருப்பதாக சொல்லி அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன். நல்லவேளை நான் தப்பித்தேன். இப்போது அவரின் பெயரை சொல்ல நான் விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X