இப்பவும் சொல்றேன் வலிமை சுமாரான படம் தான்..சீரியல் நடிகை ஸ்ரீநிதி மீண்டும் சர்ச்சை பேச்சு !
சென்னை : தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வந்த சீரியல் நடிகை ஸ்ரீநிதி மறுபடியும் வலிமை படம் குறித்து பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7சி என்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. இவர் குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களில் நடித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

ஸ்ரீநிதி
பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் ஸ்ரீநிதி சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகையாவார். திறமையான நடிகையான இவர், சமீபத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் குறித்து ஏடாகூட கருத்தை தெரிவித்து வம்பில் மாட்டிக்கொண்டார். இதனால் அஜித் ரசிகர்கள் இவரை கண்டபடி திட்டித் தீர்த்தனர். அங்கிருந்து தான் ஸ்ரீநிதிக்கு பிரச்சனை தொடங்கியது.

சிம்பு வீட்டு முன் தர்ணா
அதோடு மட்டும் இல்லாமல், சிம்பு தன்னை காதலிப்பதாகவும், நான் சிம்புவை காதலிக்கவில்லை அவர் தான் என்னை காதலிப்பதாக கூறியிருந்தார் என ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பினார். இதனால், இவரை கண்டபடி விமர்சித்து வந்தனர். திடீரென ஒருநாள், கட்டுனா சிம்புவைத்தான் கட்டுவேன் என்று சிம்பு வீட்டுக்கு முன்பு சென்று தர்ணா செய்தார். இதனால், பலரும் இவர் மனதளவில் ஏதோ பாதிக்கப்பட்டுள்ளார் என கூறியிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, நடிகை ஸ்ரீநிதிக்கு சென்னை புறநகரான புழல் பகுதியில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கவுன்சிலிங் நிச்சயம் அவருக்கு மாற்றத்தை தரும் என்பதால் அங்கே தங்கி கவுன்சிலிங் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.

சுமாரான படம் தான்
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் வராமல் இருந்த ஸ்ரீநிதி மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், வலிமை படத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. இருந்தாலும், வலிமை படம் ஒரு படம் என்பதால் அந்த படத்தை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இப்போ கேட்டாலும் வலிமை படம் ஒரு சுமாரான படம் தான் என்றார்.

மீண்டும் சர்ச்சை
வலிமை படம் எனக்கு பிடித்த படம் இல்லை, ஆனால் இந்த சமுதாயத்திற்கு தேவையான படம். நம்ம சமுதாயத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள மீண்டும் படத்தில் வருவது போல ஹீரோ யாரும் வரமாட்டார்கள் என்று பேசியுள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஸ்ரீநிதி மாறியிருப்பார் என்று பார்த்தால் மீண்டும், பழையபடியே வலிமை படத்தை விமர்சனம் செய்து இருப்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











