திருமணத்திற்கு நான் ரெடி: பொம்மலாட்டம் சிரிஜா
பொம்மலாட்டம் கதாநாயகி சிரிஜாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமணத்திற்கு சீரியலில் நடிப்பதை வரப்போகும் கணவர்தான் முடிவு செய்யவேண்டும் என்கிறார் அவர்.
திரைப்படங்களில் கதாநாயகிகளை வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதைப் போல சீரியல்களிலும் இப்போது கேரளா, கர்நாடகாவில் இருந்து கதாநாயகிகளை அழைத்து வருகின்றனர் சீரியல் தயாரிப்பாளர்கள்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் சிரிஜா. கன்னட சீரியல்களிலும் பிரபலமாக நடித்து வருகிறார். பொம்மலாட்டம் தொடருக்காக இப்போது சென்னைக்கு வந்து செல்கிறார்.

சினிமாவில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் கொஞ்சிப்பேசலாம் என்ற ஒரு படத்தில் நடித்தார் சிரிஜா. அந்தப் படம் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது. அதன்பின்னர் சினிமா வாய்ப்புகள் வராமல் போகவே பெங்களூருக்கு திரும்ப சென்றுவிட்டார்.

கன்னட சீரியல்கள்
பெங்களூருவில் கன்னட சீரியலில் நடித்து பிரபலமாகிவிட்டார். இதனையடுத்து பொம்மலாட்டம் சீரியல் தயாரிப்பாளர்கள் புதுமுக நாயகியை தமிழுக்கும் கொண்டு வந்து அறிமுகம் செய்து விட்டனர்.

மீண்டும் சினிமா
சினிமா மூன்று மாதத்தில் முடிந்து விடும், சீரியலில் ஆண்டு முழுவதுமான பயணம் இருக்கும் என்று கூறும் சிரிஜா மீண்டும் பெரிய திரையை விட்டு வந்தாலும் அதில் நடிக்கும் ஆர்வம் குறையவில்லை. நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிக்க தயார்தான் என்கிறார்.

டும் டும்...
சிரிஜாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்களாம்.

சீரியல் ரொம்ப ஈசி
சீரியலில் நம் நடிப்பில் குறையிருந்தால் அந்த தொடரிலேயே சரி செய்து கொள்ள முடியும். சினிமாவில் அது சாத்தியம் இல்லை. சாகும்வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. அது திருமணத்திற்கு பிறகு எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை இப்போது கூறமுடியவில்லை என்கிறார் சிரிஜா.


Click it and Unblock the Notifications











