Don't Miss!
- Technology
ரூ.9,000 கூட இல்ல.. அதை விட கம்மி விலைக்கு Jio-வின் புதிய 5G போன்!
- News
செவ்வாய் பெயர்ச்சி 2022: இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பணமழைதான்!..என்ஜாய்!!
- Finance
Langya virus: இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களும் பயப்பட வேண்டுமா..?
- Sports
என்ன கொடுமை சார் இது ? நியூசி வீரர் டிரெண்ட் பவுல்ட் எடுத்த வினோத முடிவு..கிரிக்கெட் உலகிற்கு சோகம்
- Lifestyle
நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
“நான் இனி பேசவில்லை’’.. விரக்தியில் நடிகை ஸ்ரீநிதி.. கிண்டலடிக்கு நெட்டிசன்ஸ் !
சென்னை : சீரியல் நடிகை ஸ்ரீநிதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரக்தியில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.
எல்லாமே காதலருக்காக... எலும்பும் தோலுமாக மாறிய வாரிசு நடிகை.. ஆனால்.. விஷயமே வேற !

நடிகை ஸ்ரீநிதி
சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாவதைவிட, ஒரே ஒரு சீரியலில் நடித்து இல்லதரசிகளின் மனதில் இடம் பிடித்து விரைவில் புகழின் உச்சுக்கு பலர் சென்றுவிடுகின்றனர். அப்படி பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீநிதி. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

பொறுமை இல்லை
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் வலிமை படம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து இருந்தார். அதாவது, வலிமை திரைப்படம் எப்படி இருக்கிறது என்று மீடியாவில் ஸ்ரீநிதியிடம் கேட்க, அஜீத் சாரை நேரில் கூட பார்த்து விடலாம். ஆனால் வலிமை படத்தை பார்ப்பதற்கு எனக்கு பொறுமை இல்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

சிம்பு வீட்டின் முன் தர்ணா
மேலும், 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள்... நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்' என குறிப்பிடப்பட்டு மீம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அது மட்டும் இல்லாமல், சிம்பு தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகக் கோரி அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்தினார். இதனால், சிம்புவின் ரசிகர்கள் மிகவும் கடுப்பாகி அவரைத திட்டி தீர்த்தனர்.

மன அழுத்தத்தில்
மேலும், யாரடி நீ மோகினி சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நட்சத்திரா குறித்து, ஒரு வீடியோவை பதிவிட்டு பின்னர் அதை டெலிட் செய்துவிட்டார். இதற்கு, நட்சத்திரா பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியிருந்தார்.

நான் இனி பேசவில்லை
இந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் இனி பேசவிளை என் கதை பேசும்.. என எழுத்துப்பிழையுடன் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் எம்மா அது... "நான் இனி பேசவில்லை என் கதை பேசும்" முதலில் தமிழ் கத்துக்கிட்டு வாங்க என்று ஸ்ரீநிதியை சகட்டுமேனிக்கு திட்டிதீர்த்து வருகின்றனர்.