தேவயானியின் இடத்தைப் பிடித்த தென்றல் ஸ்ருதிராஜ்

By Mayura Akilan

சீரியல் நடிகை ஸ்ருதிராஜ் சத்தமில்லாமல் தேவயானியின் இடத்தினைப் பிடித்துவிட்டாராம். அது வேறு ஒன்றுமில்லை. நீண்ட நாட்கள் ஒளிபரப்பான தொடரின் நாயகி என்ற பெயர்தான்.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தென்றல் தொடர் 1200 வது எபிசோடை இன்னும் சில தினங்களில் எட்டிப்பிடிக்க இருக்கிறது. நாயகி துளசியாக நடிக்கும் ஸ்ருதிராஜ் இப்போது இல்லத்தரசிகளின் செல்லம்.

அதே ஸ்ருதி ராஜ் விஜய் டிவியின் ஆபிஸ் சீரியலில் ராஜியாகவும் வந்து அசத்துகிறார். இரண்டு தொடர்களிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ருதிராஜ் சினிமா வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம்.

சினிமா ஹீரோயினாக நடித்து

சினிமா ஹீரோயினாக நடித்து

ஸ்ருதிராஜ் ஏற்கனவே சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர்தான். வாய்ப்பு கிடைக்காமல் போகவே தென்றல் தொடர் மூலம் சின்னத்திரையில் துளசியாக அறிமுகமானார்.

1000 எபிசோடுகளுக்கு மேல்

1000 எபிசோடுகளுக்கு மேல்

தென்றல் தொடர் 1200 வது எபிசோடை எட்டிப்பிடிக்க உள்ளது. துளசி கதாபாத்திரம் சீரியலைப் பார்ப்பவர்கள் மனதில் பதிந்துவிட்டது. துளசிக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

ஆபிஸ் தொடரிலும்

ஆபிஸ் தொடரிலும்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆபிஸ் சீரியலும் 300 வது எபிசோடை எட்டிப்பிடித்துள்ளது. இந்தத்தொடரும் வெற்றிகரமான தொடராக அமைந்து போனதில் ஸ்ருதிக்கு ரொம்பவே சந்தோசம்.

அக்கா, அண்ணி வேண்டாம்

அக்கா, அண்ணி வேண்டாம்

தற்போது மீண்டும் சினிமாவில் வந்த அக்கா அண்ணி கேரக்டர்களை வேண்டாம் என்ற மறுத்துவருகிறார். காரணம் சினிமாவில் ரிஸ்க் அதிகம் என்பதுதானாம்.

ஆபிசுக்கு போறமாதிரி இருக்கு

ஆபிசுக்கு போறமாதிரி இருக்கு

சின்னத்திரையில் நேசித்து நடித்து வருகிறேன். அவுட்டோர் ஷூட்டிங் இருக்காது. காலையில் படப்பிடிப்புக்கு வந்தால் மாலையில் வீட்டுக்கு போய்விடலாம். ஆபீஸ் போய் வரும் உணர்வே இருக்கும்.

உறவினர்கள் போல பழகலாம்

உறவினர்கள் போல பழகலாம்

ஒரே சீரியலில் ஆண்டு கணக்கில் நடிப்பதால் உடன் நடிப்பவர்கள் உறவினர்களாகவே ஆகிவிடுகிறார்கள். சினிமாவில் இதெல்லாம் இருக்காது.

தேவயானி இடத்தை

தேவயானி இடத்தை

தென்றல் தொடரில் கோலங்கள் தேவயானி இடத்தை பிடித்து விட்டதாக எல்லோரும் பாராட்டுகிறார்கள். 1200 எபிசோட்களில் நடித்தது என்னை பொறுத்தவரை சாதனைதான்.

இரண்டே போதும்

இரண்டே போதும்

மேலும் சில சிரியல் வாய்ப்புகள் வருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு சீரியல் போதும் என்று அவற்றையும் தவிர்த்து விட்டேன் என்கிறார் ஸ்ருதி ராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X