வாழ்க்கையில் ரிவைண்ட் பட்டன் இருந்தா? மறைந்த கணவரை நினைத்து கலங்கும் நடிகை!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் தான் நாதஸ்வரம். அந்த சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த சீரியலைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த. இவர் 2022 ஆம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமான ஒரு வருடத்திலேயே அரவிநித் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் நினைவில் இருந்து மீளாமல் இருக்கும் ஸ்ருதி சண்முகப்பிரியா, தனது கணவர் குறித்து உருக்கமான ஒரு பதிவினை போட்டுள்ளார்.
அதில், தனது கணவருடன் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு, என் வாழ்க்கையில் ரிவைண்ட் பட்டன் இருந்தா? இந்த அழகான தருணம் மீண்டும் கிடைக்க ஆசைப்படுகிறேன். வாழ்க்கையையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்பதற்கான ஒரு சிறிய நினைவூட்டல் தான் இந்த வீடியோ. உங்களிடம் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து ரசித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள். வாழ்க்கை என்பது நாடகம், அதிகப்படியான சிந்தனை, வெறுப்பு, பொறாமை மற்றும் ஈகோ ஆகிவை கொண்டது.

நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா: ஒரு நாள், அது ஒரு நினைவாக மாறப்போகிறது. உங்களிடம் இருக்கும்போது எல்லாவற்றிற்கும் நன்றியுடன் இருங்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள், மனம்விட்டு பல விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள், நல்ல மனநிலையைக் கொண்டிருங்கள், கனிவாக இருங்கள் மற்றும் அன்பைப் பரப்புங்கள் என தனது கணவரை நினைத்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப்பார்த்த பலர் ஸ்ருதி சண்முகப்பிரியாவிற்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
அவரின் நினைவுடன்: நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா,அண்மையில் அளித்த பேட்டியில், எனக்கு எல்லாமே அவன் தான். அரவிந்த் இப்போது உயிரோடு இல்லை என்றாலும், அவரின் நண்பர்களிடம் பேசும் போதும், நான் தனியாக இருக்கும் போது அவனைப்பற்றி பேசிக்கொண்டே, நினைத்துக் கொண்டே தான் இருப்பேன். நான் நினைக்க நினைக்க அவனுடைய நினைவுகள் எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கும். அவன் என்னுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். என் வாழ்க்கையில் அரவிந்தின் நினைவு மட்டும் தான் என்னுடன் இருக்கிறது. அவரின் நினைவுகளுடன் தான் நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் என பேசி இருந்தார்.


Click it and Unblock the Notifications











