Swetha: சொந்த பையனையே அக்கா பையன்னு சொல்லி தத்தெடுத்தோம்.. சீக்ரெட் பகிர்ந்த சீரியல் நடிகை ஸ்வேதா!
சென்னை: சின்னத்திரையில் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என கலக்கலாக வலம் வந்தவர் ஸ்வேதா பாரதி. இவரது முதல் சீரியலான அண்ணாமலை மிகச்சிறப்பான என்ட்ரியை கொடுத்த நிலையில், அடுத்தடுத்து முன்னணி சீரியல்களில் நடித்து மாஸ் காட்டினார். வம்சம், மலர்கள் என அடுத்தடுத்த இவரது சீரியல்கள் சிறப்பாக அமைந்தன.
ஒரு கட்டத்தில் பாரதி என்பவருடன் லிவ்-இன்னில் வாழ்ந்துவந்த ஸ்வேதா அவரையே திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. ஆனால் திருமணத்திற்கு முன்னதாகவே இவர்களின் மூத்த குழந்தை பிறந்த நிலையில் அவன் முன்னிலையிலேயே இவர்கள் திருமணம் நடந்தது.

நடிகை ஸ்வேதா பாரதி: சின்னத்திரையில் ஏராளமான சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்வேதா பாரதி. அண்ணாமலை சீரியல் மூலம் இவர் என்ட்ரி கொடுத்த நிலையில் முன்னதாகவே பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். அண்ணாமலை சீரியல் மிகப்பெரிய வரவேற்பை ஸ்வேதாவிற்கு ஏற்படுத்திய நிலையில், இதையடுத்து வம்சம், ரோஜா, மலர்கள், செம்பருத்தி என அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார் ஸ்வேதா. தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியின் மானாட மயிலாட நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துக் கொண்டு, ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டார்.
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்: இதையடுத்து ஜீ தமிழின் சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்ட இவர், டைட்டிலையும் தட்டித் தூக்கினார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாரதியுடன் லிவ்-இன்னில் இருந்ததாகவும் அப்போது லிவ்-இன் என்றால் என்னவென்றே தெரியாமலேயே அந்த வாழ்க்கையை தாங்கள் தேர்ந்தெடுத்ததாகவும் ஸ்வேதா கூறியுள்ளார். முன்னதாக தன்னுடைய அப்பா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அம்மாவிற்கும் இதயக் கோளாறு இருந்ததால் ஸ்வேதா குறித்து அவரிடம் கூற முடியாத நிலை இருந்ததாகவும் ஆனாலும் தன்னை நம்பி வீட்டை விட்டு வெளியில் வந்த ஸ்வேதாவை திரும்பி அனுப்ப விரும்பாமல் லிவ் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்ததாக பாரதியும் மலரும் நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார்.
சொந்த குழந்தையை தத்தெடுத்த ஸ்வேதா: இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்த நிலையில் ஊரிலிருந்து இரு குடும்பத்தினரும் வந்தால் அதை மறைக்க பட்ட பாட்டை நினைத்தால் தற்போது காமெடியாக உள்ளதாகவும் இந்த தம்பதி குறிப்பிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் திருமணத்திற்கு முன்னதாகவே குழந்தை பிறந்தநிலையில், அவரை ஸ்வேதாவின் அக்கா மகன் என்றும் அக்காவும் மாமாவும் பயங்கரமான விபத்தில் உயிரிழந்ததால் அவர்களின் குழந்தையை தத்தெடுத்ததாக பார்ப்பவர்களிடம் தான் கூறியதாகவும் ஸ்வேதா தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் சொந்த மகனையே தத்தெடுத்தது குறித்து தெரிந்த மற்றவர்கள் முகத்திற்கு நேராகவே பேசியதாகவும் கழவி ஊற்றிய சம்பவங்களும் நிகழ்ந்ததாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகன் முன்பு திருமணம்: இதையடுத்து தன்னுடைய குழந்தையின் முன்னதாகவே தங்களது திருமணம் நடந்ததாகவும் இந்த ஜோடி பகிர்ந்துக் கொண்டுள்ளனர். ஆனால் மூத்த மகன் தன்னுடைய குழந்தை என்று தெரிந்த பின்பு தன்னுடைய அம்மா மிகவும் சந்தோஷப்பட்டதாகவும் தத்து குழந்தையாக பார்க்கப்பட்ட அவன், தன்னுடைய பேரன் என்பது அவருக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்ததாகவும் பாரதி பகிர்ந்துள்ளார். இதையெல்லாம் எந்தவிதமான முடிவுடனும் தாங்கள் செய்யவில்லை என்றும் சூழ்நிலைதான் இந்த நிகழ்வுகளை தங்களை செய்ய வைத்ததாகவும் பாரதி தெரிவித்துள்ளார். தன்னை நம்பி வந்த பெண்ணை ஏமாற்றக்கூடாது என்பது மட்டுமே தன்னுடைய நினைவில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











