யாரும் அதை கொடுக்க முடியாது.. உருகிய வைஷ்ணவி.. சிறகடிக்க ஆசை ஹீரோ ரியாக்ஷன் என்னன்னு பாருங்க!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் நாயகன் வெற்றி வசந்த். இவர் இந்த சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்.

இவருக்கும் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவிக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சென்னையில் மிகவும் சிறப்பாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவன் குறித்து வைஷ்ணவி உற்சாகப் பதிவு ஒன்றை instagram-ல் வெளியிட்டுள்ளார்.

vetri vasanth vaishnavi

சீரியல் நடிகர் வெற்றி வசந்த்: விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறார் வெற்றி வசந்த். இந்த சீரியலில் முத்து -மீனா ஜோடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெற்றி வசந்த்திற்கும் விஜய் டிவியின் பொன்னி சீரியல் நாயகி வைஷ்ணவிக்கும் சென்னையில் சிறப்பான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான சின்னத்திரை நடிகர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வெற்றி வசந்த் நாயகனாக நடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் டீம் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

வைஷ்ணவி உருக்கமான பதிவு: தன்னுடைய திருமணத்தையொட்டி அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெற்றி வசந்த் பதிவிட்டிருந்தார். அந்த வகையில் திருமணம் முடிந்து அடுத்தடுத்து மணமக்கள் சென்ற இடங்கள், மணமகள் சமைக்க தயாரானது உள்ளிட்ட பல வீடியோக்களையும் பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வைஷ்ணவி தன்னுடைய கணவன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு வெற்றி வசந்தும் லவ் யூ மா என்று பதிலளித்துள்ளார்.

எதிர்பார்க்காத நபர்: தன்னுடைய வாழ்க்கையில் எதிர்பார்க்காத ஒன்றாக வெற்றி வசந்த் கிடைத்துள்ளதாகவும் அவரை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியாத அவரை கடவுள் தனக்கு கொடுத்துள்ளதாகவும் தன்னுடைய பதிவில் வைஷ்ணவி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நீண்ட பதிவினை இருவரும் சேர்ந்திருக்கும்படியான வீடியோவுடன் பகிர்ந்துள்ளார். தன்னை மிகவும் நேசிக்கும் வெற்றி வசந்திற்கு நன்றி கூறியுள்ள வைஷ்ணவி, இதுவரை தன்னுடைய முகத்தில் இதுபோன்ற சிரிப்பை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார். இந்த தன்னுடைய சிரிப்பிற்கு வெற்றி வசந்திற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

வியப்பான நண்பர்: தன்னை அதிகமாக சிரிக்க வைப்பதாகவும் அவருடன் இருப்பது அதிகமான மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் வைஷ்ணவி மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தோஷத்தை யாரும் கொடுக்க முடியாது என்றும், தன்னை குறித்த பல விஷயங்களை தான் யாரிடமும் இதுபோன்று பகிர்ந்துக் கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார். தன்னை வெற்றி வசந்த் முழுமையாக புரிந்து வைத்துள்ளதாகவும் வைஷ்ணவி உருக்கம் தெரிவித்துள்ளார். வியப்பான வகையில் தனக்கு நண்பராக இருப்பதற்கும் வைஷ்ணவி வெற்றி வசந்திற்கு நன்றியை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X