பிரிவதே ரிலேஷன்ஷிப்புக்கு நல்லது.. சரவண விக்ரமுடனான உறவு குறித்து சின்னத்திரை நடிகை VJ தீபிகா ஓபன்
சென்னை: ரசிகர்களுக்கு எப்போதுமே தங்களின் அபிமான நடிகர்களின் , நடிகைகளின் சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அப்படி இருக்கும்போது, சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் குறித்து தெரிந்து கொள்வதில் ரசிகர்களுக்கு எப்போதுமே ஆர்வம் குறைந்தது இல்லை. இப்படி இருக்கும்போது, சின்னத்திரை நடிகை வி.ஜே. தீபிகாவின் சமீபத்திய பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அவர் சின்னத்திரை நடிகர் சரவணன் விக்ரம் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசுகையில், நானும் நடிகர் சரவணன் விக்ரமும் தொடக்கத்தில் அதிக ரீல்ஸ் செய்து கொண்டு இருந்தோம். அப்போது அதன் மூலம் எங்களுக்கு என்று தனி வருமானம் வந்து கொண்டு இருந்தது. புரோமோசன்களும் நான் செய்து கொண்டு இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் நாம் அங்கேயே தங்கி விடக் கூடாது என்பதற்காக நான் அவற்றை கைவிட்டுவிட்டேன். நாமும் அடுத்தடுத்த கட்டத்துக்கு வளரவேண்டும்.

பிரிவது நல்லது: இது மட்டும் இல்லாமல் சரவணன் விக்ரமும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குச் செல்ல எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறார். அவர் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். நான் முழுக்க முழுக்க சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இதனால் இருவரும் இணைந்து பயணிப்பதற்காக ஆப்ஷன்கள் எதுவும் இல்லை. இதனால் இருவரும் வேறு வேறு திசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒரு ரிலேஷன்ஷிப் எவ்வளவு தூரம் ஒன்றாக போகிறதோ, அவ்வளவு தூரம் ஒன்றாக எடுத்துக் கொண்டு போக வேண்டும். அதுவே, ஏதோ ஒரு புள்ளியில் பிரிய வேண்டிய சூழல் வருகிறது என்றால் பிரிந்துவிட வேண்டும்.
சரவண விக்ரம்: அப்படிப் பிரிவதுதான் அனைவருக்கும் நல்லது. உன்னுடைய எதிர்காலத்திற்கு உனக்கு வாழ்த்துகள், என்னோட எதிர்காலத்திற்கு எனக்கு வாழ்த்துகள் என்று சொல்லி பிரிந்து விடுவது என்பது இருவருக்கும் நல்லது. கூடவே இருந்து கொண்டு குடைச்சல் கொடுத்துக் கொண்டோ, நச்சரித்துக் கொண்டோ இருந்தால் அது தவறு. அவர்கள் நன்றாக இருந்தால் அதுவே சந்தோஷம். நாம் தெரியாத ஒரு விஷயத்தை செய்கிறோம் என்றால் அது குறித்து கற்றுக் கொள்வோம். அப்படி இருக்கும் போது காதலை மட்டும் கண்மூடித்தனமாக செய்யக்கூடாது. அதற்கும் நாம் தயாராகனும். நமது மதிப்பு குறித்து நமக்குத் தெரியனும். உறவுகளுக்கான 8 விதிகள் என்று ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது. அதைப் படியுங்கள்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











