»   »  கல்யாணமான ஆண்களேதான் வேணுமா? சீரியல் கதையை மாத்துங்களேன்

கல்யாணமான ஆண்களேதான் வேணுமா? சீரியல் கதையை மாத்துங்களேன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் டிவி சீரியல்களில் பெரும்பாலும் திருமணமான ஆண்களின் மீது காதல் வயப்படுவது போலவே கதைகள் காட்சிகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் இத்தகைய சீரியல்களை ஒளிபரப்புவதை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

பகலோ இரவோ எப்போது போட்டாலும் டிவி சீரியல்களில் ஒன்று ஒப்பாரி வைப்பார்கள் இல்லையா அடுத்தவர் குடும்பத்தை கெடுப்பது எப்படி என்று திட்டம் போடுவார்கள். அதை விட இப்போது அதிகம் சீரியல் இயக்குநர்கள் யோசிப்பது திருமணமான ஆண்களை வளைத்து போடுவதற்கு கொடுக்கும் ஐடியாக்கள்தான்.

சீரியலை பார்க்கும் சிறுவர்கள் கூட இரு பெண்களை திருமணம் செய்து கொள்வதோ ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை காதலிப்பது தவறில்லையா என்பது போலவும் பேச ஆரம்பித்து விட்டனர்.

மழையால் மின்சாரம் தடைபட்டு சீரியல் சூட்டிங் பாதிக்கப்பட்டது. சில வாரங்கள் டிவி சீரியல் கண்றாவிகளை பார்க்காமல் இருந்தனர் பொதுமக்கள் தற்போது மீண்டும் இந்த கந்தரகோல சீரியல்களை பார்க்க வேண்டியதாகிவிட்டது என்பது இல்லத்தரசிகளின் புலம்பலாக உள்ளது.

வளைச்சு மடியில போடுவேன்

வளைச்சு மடியில போடுவேன்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'அன்னக்கொடியும் ஐந்து பெண்களும்' என்ற சீரியல் ஒளிபரப்பாகிறது. இரவில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாவது ஒருபுறம் என்றால் அதை காலை நேரத்தில் மறு ஒளிபரப்பு செய்கின்றனர். இரு பெண்களை திருமணம் செய்து கொள்ளும் குடும்ப கதைதான்.

சித்தார்த் - கௌரி

சித்தார்த் - கௌரி

வக்கீலான கௌரி தான் காதலித்த சித்தார்த்தை பெரியம்மா பாண்டியம்மாவின் உதவியுடன் திருமணம் செய்து கொள்ள இது அன்னக்கொடிக்கு பிடிக்காமல் போகிறது. மாமியார் உமா மகேஷ்வரியும் கௌரியை வீட்டை விட்டு விரட்ட திட்டம் போடுகிறாள்.

சதி செய்யும் லீலாவதி

சதி செய்யும் லீலாவதி

கௌரியின் பெரியப்பா மகள் லீலாவதியோ சித்தார்த் மீதான ஒருதலைக்காதலால் தன் கழுத்தில் தானே தாலியை கட்டிக்கொண்டு இப்போது கௌரிக்கு போட்டியாக சித்தார்த் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு அடாவடி செய்கிறார். அதற்கு ஐடியா கொடுத்ததே உமா மகேஸ்வரிதானாம்.

வாணி ராணி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் ஆரம்பம் முதலே ஏதாவது ஒரு எபிசோடில் கள்ளக்காதல், இருதார திருமணம் என்று நுழைத்து விடுவார்கள். இப்போதோ திருமணமான கவுதமை காதலிக்கிறார் ஒரு இளம்பெண். அதுவும் கவுதமின் மனைவி பூஜாவை எப்படி கழற்றி விடுவது என்று தோழியிடம் ஐடியாவும் கேட்பதுதான் கொடுமை.

மரகத வீணை

மரகத வீணை

சீரியலுக்கு தலைப்பு எல்லாம் நன்றாகத்தான் வைக்கிறார்கள். ஆனால் கதையில்தான் கள்ளக்காதலை புகுத்துகிறார்கள். ஏற்கனவே திருமணமான சுப்புவின் மீது காதல்வயப்பட்ட சப். இன்ஸ்பெக்டர் கவிதா, பல திட்டங்களை தீட்டி சுப்புவை வளைக்க முயற்சி செய்தும் முடியாமல் போகிறது.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

சுப்புவின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகவே இதனால் எபிசோடு முழுக்க அழுது குவிக்கும் சரசு... தனது தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்துகிறாள். எப்படியோ சீரியல் சீரியலுக்கு கள்ளக்காதலும், இருதார திருமணத்திற்கு ஆதரவாகவே கதைகள் எழுதப்படுகின்றன என்பதே இல்லத்தரசிகளின் கவலையாக இருக்கிறது.

பிடிக்காட்டி பார்க்காதீங்க

பிடிக்காட்டி பார்க்காதீங்க

இதையெல்லாம் தடை செய்யச் சொல்லி யாரும் போராட மாட்டாங்களோ அப்படியே போராடினாலும் உங்களை யாரு சீரியல் பார்க்கச் சொன்னா... பிடிக்காத சீரியலை பார்க்காதீங்க என்று தயாரிப்பாளர்களும், சீரியல் இயக்குநர்களும் சொல்வார்களோ?

English summary
Most of the serials in Tamil are encourage illicit love in a very casusal way and misleading the people

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil