ஆயிரம் எபிசோடுகளாய் அழும் இளவரசி… தென்றல் துளசி….

By Mayura Akilan

இன்றைக்கு திரைப்படங்கள் நூறு நாட்கள் ஓடுகிறதோ இல்லையோ டிவி சேனல்களில் சீரியல்கள் 500, 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகின்றன.

டி.ஆர்.பி எனப்படும் மந்திரச்சொல்தான் சீரியலை ஓடவைக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை டிவி தொடர்கள் என்றாலே 12 எபிசோடுகள்தான் குறைந்த பட்சம் ஒளிபரப்பானது.

தினசரி சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய உடன் நூறு எபிசோடுகள் பிறகு 500 எபிசோடுகள் என உயர்ந்து இன்றைக்கு ஆயிரம் எபிசோடுகள் கூட அநாயாசமாய் கடக்கின்றன.

தென்றல்

தென்றல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் தொடர் விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனத்தின் தயாரிப்பு தென்றல். நடுத்தரவர்க்கத்தின் குடும்ப கதை. தமிழ்-துளசியின் ரொமான்ஸ், மாமியார் கொடுமை, தோழிகளின் பாசம் என இரவு 9 மணிக்கு தென்றலின் டி.ஆர்.பி அமோகம் அதனால்தான் ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது.

இளவரசி

இளவரசி

ராதிகாவின் ராடான்டிவி தயாரித்து வழங்கும் சீரியல் இளவரசி. சன் டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மூன்று தாரங்களை மணந்த சுப்ரமணி. கண்ணீரும், கவலையுமாக போராடும் இளவரசி என ஆயிரம் எபிசோடுகளை கடந்துள்ளது.

நாதஸ்வரம்

நாதஸ்வரம்

மெட்டி ஒலி தொடரை இயக்கிய திருமுருகன் தயாரித்து இயக்கும் தொடர் நாதஸ்வரம். குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் தொடர் இது. யாரும் யாருடைய குடும்பத்தைக் கெடுக்கவில்லை என்பது ஆறுதல். பெண்களின் மறுமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த தொடர் ஆயிரம் எபிசோடுகளை தொடப்போகிறது. இதுவும் சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகிறது.

சரவணன் மீனாட்சி

சரவணன் மீனாட்சி

விஜய் டிவியில் வெற்றிகரமாக 500 வது எபிசோட் என்று டைட்டில் போட்ட ஒரே சீரியல் சரவணன் மீனாட்சியாகத்தான் இருக்கும். ஏனெனில் 250 எபிசோடுகளை தொடுவதே கொஞ்சம் சிரமமானது. இப்போது சரவணன் மீனாட்சி பார்ட் 2 ஒளிபரப்பாகிறது.

முத்தாரம்

முத்தாரம்

கணவன் மனைவியாக இருந்து விவாகரத்து பெற்றுக்கொண்டு அண்ணன் தங்கை திருமணம் செய்து கொள்கின்றனர். மகா குழப்பமான கதை. இரண்டு கதாநாயகிகள் மாறிவிட்டனர். ஆனாலும் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிறது.

அழகி

அழகி

கணவனை இழந்த பெண் தனது குழந்தைகளை எப்படி சிரமப்பட்டு வளர்க்கிறார் என்பதுதான் கதை. சுந்தரியை காண்பிக்கும் போது குடம் குடமாய் கண்ணீரை வாரி இறைக்கின்றனர். இரவு 10.30 மணிக்கு இல்லத்தரசிகள் அழுகையோடு பார்த்துவிட்டு படுக்கும் சீரியல் இது. ஆனாலும் 550 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிறது.

முந்தானை முடிச்சு

முந்தானை முடிச்சு

சன் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர் முந்தானை முடிச்சு. கதை ஆரம்பத்தில் குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் தொடராகத்தான் இருந்தது. கடைசியில் பங்காளி குடும்பத்தை கெடுப்பது, இருதார மணம், ஒரே வீட்டில் மனைவியருடன் குடித்தனம் என சொதப்பலாக போகிறது. ஆனாலும் அசராமல் 900 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிறது.

அப்பாடா முடிஞ்சு போச்சே

அப்பாடா முடிஞ்சு போச்சே

எப்படா இந்த சீரியல் முடியும் என்று சில நேரங்களில் எதிர்பார்க்க வைப்பார்கள். அப்படி 2013ம் ஆண்டு முடிந்த சீரியல்களின் வரிசையில் உதிரிப்பூக்கள், மருதாணி, செல்லமே, உறவுகள், திருமதி செல்வம், தங்கம் என பல சீரியல்கள் உண்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X