மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி.. ஆனா இந்த முறை ஜீ தமிழ் சேனல்ல நடிக்கறாங்க திருமதி செல்வம்!

சென்னை : விக்ரமிற்கு கம்பேக் கொடுத்த சேது படத்தில் அபிதா என்ற கேரக்டரில் சிறப்பாக நடித்தவர் அபிதா.

தொடர்ந்து சில படங்களில் நடித்த இவருக்கு தன்னை நிரூபித்துக் கொள்ள சரியான கேரக்டர்கள் அமையவில்லை.

இந்நிலையில் சன் டிவியின் திருமதி செல்வம் என்ற தொடரில் நடித்து சிறப்பான பெயரை பெற்றார்.

விக்ரமின் கம்பேக் படம் சேது

விக்ரமின் கம்பேக் படம் சேது

சரியான வாய்ப்பிற்காக கோலிவுட்டில் அலைமோதிக் கொண்டிருந்த விக்ரமிற்கு சிறப்பான கம்பேக்கை கொடுத்த படம் சேது. பாலா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிப்பில் மிரட்டியிருந்தார் விக்ரம். இந்த படத்தை அடுத்து அவருக்கு அமைந்ததெல்லாம் வெற்றிப்படங்கள்தான். அந்த அளவிற்கு அவருக்கு முக்கியமான படமாக சேது அமைந்தது.

எளிமையான பிராமணப் பெண்

எளிமையான பிராமணப் பெண்

இந்தப் படத்தில் எளிமையான பிராமணப் பெண்ணாக நடித்திருந்தார் அபிதா. இந்தக் கேரக்டர் அவருக்காகவே உருவாக்கப்பட்டது போல அமைந்திருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகையாக வலம்வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீறி வரும் காளை, பூவே பெண் பூவே என சில படங்களில் நடித்தார்.

சீரியலில் கவனம்

சீரியலில் கவனம்

தொடர்ந்து வாய்ப்புகள் சரியாக அமையாத நிலையில், சீரியலில் கவனம் செலுத்தினார். சன் டிவியின் திருமதி செல்வம் தொடர் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்தத் தொடர் இவரை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து சென்றது. ஏராளமான ரசிகர்களை பெற்றார். 2007 முதல் 2013 வரை இந்தத் தொடர் சன் டிவியில் ஒளிபரப்பானது.

நடிப்பிலிருந்து விலகிய அபிதா

நடிப்பிலிருந்து விலகிய அபிதா

இறுதியாக சன் டிவியின் முத்தாரம் என்ற தொடரில் நடித்த இவர், தொடர்ந்து நடிப்பிலிருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் அபிதா. ஆனால் சன் டிவியில் இல்லை. தற்போது ஜீ தமிழ் சேனலில் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ள மாரி என்ற தொடரில்தான் அபிதா களமிறங்கியுள்ளார். இந்தத் தொடா இன்று முதல் தினந்தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

அபிதா மகிழ்ச்சி

அபிதா மகிழ்ச்சி

தொடரில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும் அபிதா இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருமதி செல்வம் மூலம் படிக்காத அப்பாவி பெண்ணாக அனைவரையும் கவர்ந்த அபிதா இந்தத் தொடரிலும் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X