திருமணத்தை சொல்லல..கர்ப்பத்தை மட்டும் சொன்னா எப்படி? சீரியல் நடிகையை கேள்வி கேட்கும் ஃபேன்ஸ்!

சென்னை : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் செவ்வந்தி. இந்த சீரியலில் நடிகர் ராகவ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதே சீரியலில், நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிக்கிறார். இவர் ஏற்கனவே மகராசி என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் நடிகர் அர்னவை ரகசியத் திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திவ்யா ஸ்ரீதர்

திவ்யா ஸ்ரீதர்

2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகமானவர் திவ்யா ஸ்ரீதர். அந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த அர்னவ் இடையே காதல் மலர்ந்ததாகவும் அவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.

நடிகர் அர்னவ்

நடிகர் அர்னவ்

ஆனால், இந்த போட்டோக்கள் விளம்பரத்தில் நடித்த போது எடுத்தது என்றும் திருமண போட்டோ இல்லை என்று கூறி வந்தனர். இருப்பினும் நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் விதவிதமான போட்டோவை பகிர்ந்து வந்தனர். நடிகர் அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா தொடரின் நடித்து வருகிறார்.

2017ல் காதலித்தோம்

2017ல் காதலித்தோம்

இந்நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எங்கள் அழகான பயணம் 2017 இல் தொடங்கியது. கேளடி கண்மணி தொடரின் போது நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம், புரிந்து கொண்டோம். இறுதியாக நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளோம்.

அதிர்ஷ்டமான ஜோடி

அதிர்ஷ்டமான ஜோடி

5 வருடத்தில் ஒற்றுமை, அன்பு, கவனிப்பு, சண்டைகள், வாக்குவாதங்கள் என பலவற்றை இணைந்தே சந்தித்தோம். பல நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதத்தால் நாங்கள் அதிர்ஷ்டமான ஜோடிகளாக இருக்கிறோம். எங்களின் சொந்தக் கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் எங்கள் வாழ்வின் மிகப்பெரிய இலக்கை அடைந்துள்ளோம்.

குழந்தையை எதிர்பார்க்கிறோம்

குழந்தையை எதிர்பார்க்கிறோம்

இப்போது, ​​நாங்கள் எங்கள் வாழ்க்கையின் மிக அற்புதமான மற்றும் பொறுப்பான அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளோம். விரைவில் நாங்கள் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறோம். காதலர்களாகவும், மனைவிகளாகவும், இப்போது பெற்றோராகவும் இதை எப்போதும் போற்றுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஏற்கனவே திருமணமானவர்

ஏற்கனவே திருமணமானவர்

எனக்கும் என் குடும்பத்துக்கும் நீங்கள் அளித்த அளப்பரிய அன்புக்கும் ஆதரவுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என திவ்யா அதில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பலர் கல்யாணம் எப்போ ஆச்சு என கேட்டு வருவதுடன், திருமணத்தை சொல்லல..கர்ப்பத்தை மட்டும் சொன்ன எப்படி? என கேட்டு வருகின்றனர். திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X