Sevvanthi: 1000 எபிசோட்களை வெற்றிகரமாக தாண்டும்.. அதிரடி திருப்பங்களுடன் களமிறங்கும் செவ்வந்தி!
சென்னை: நடிகை திவ்யா லீட் கேரக்டரில் நடித்து சன் டிவியில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் சீரியல் செவ்வந்தி. குடும்பத்தை எதிர்த்து தான் காதலித்த அர்ணவை மதம்மாறி திருமணம் செய்துக் கொண்டார் திவ்யா. ஆனால் சில மாதங்களிலேயே இவர்களின் திருமண வாழ்க்கை கசக்க கர்ப்பமாக இருந்த திவ்யா ஸ்ரீதரை விட்டு விலகினார் அர்ணவ். இந்த விஷயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அழகிய பெண் குழந்தைக்கு தாயாரானார் திவ்யா. தொடர்ந்து தன்னுடைய மகளை சூட்டிங்கிற்கு அழைத்து சென்று நடிக்கவும் துவங்கினார். செவ்வந்தி சீரியலில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செவ்வந்தி சீரியல் விரைவில் எண்ட் கார்ட் போடவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இந்தத் தகவலை சீரியல் தரப்பு மறுத்துள்ளனர். தினந்தோறும் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் செவ்வந்தி சீரியல் தற்போது 500 எபிசோட்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த சீரியல் அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களுடன் அதிரடி நடைபோடவுள்ளதாகவும் 1000 எபிசோட்களை கடந்து இந்த சீரியல் வெற்றிநடை போடும் என்றும் தயாரிப்பு தரப்பில் நம்பிக்கை பகிரப்பட்டுள்ளது.

செவ்வந்தி சீரியல்: சன் டிவியின் முன்னணி சீரியல்களின் வரிசையில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்துவருகிறது செவ்வந்தி சீரியல். தினந்தோறும் காலை 11.30 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரையில் இந்தத் தொடர் ஒளிபரப்பாக வருகிறது. நடிகை திவ்யா ஸ்ரீதர் இந்த கதையின் நாயகியாக பல்வேறு போராட்டங்களை எதிர்கொள்பவராக நடித்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக கணவர் மனோகர் மற்றும் நண்பராக கார்த்திக் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மனோகராக ராகவ் மற்றும் கார்த்தியாக நிதின் கிரிஷ் ஐயர் ஆகியோர் நடித்து வருகின்றனர். அடுத்தடுத்த அதிரடி எபிசோட்களை கொடுத்துவருகிறது செவ்வந்தி சீரியல்.
நடிகை திவ்யா ஸ்ரீதர்: இந்த சீரியலில் ஏராளமான போராட்டங்களை சந்தித்து வருகிறார் செவ்வந்தி. நிஜ வாழ்க்கையிலும் இந்த சீரியல் நாயகி திவ்யா ஸ்ரீதர் பல போராட்டங்களை சந்தித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அர்ணவ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் திவ்யா ஸ்ரீதர். பெற்றோரை மீறி மதம்மாறி திருமணம் செய்த நிலையில் சில மாதங்களிலேயே இவர்களது குடும்ப வாழ்க்கை கசந்தது. தொடர்ந்து இருவரும் பிரிந்தனர். தன்னை அர்ணவ் அடித்து துன்புறுத்துவதாக திவ்யா கொடுத்த புகாரில் அர்ணவ் கைது செய்யப்பட்டார்.
திவ்யா -அர்ணவ் பிரிவு: தொடர்ந்து இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரையொருவர் குறைக்கூறிக் கொண்டனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த திவ்யா, அழகான பெண் குழந்தைக்கு தாயாரானார். செவ்வந்தி படக்குழுவினர் முன்னதாக இவரது வளைகாப்பை சூட்டிங் ஸ்பாட்டில் நடத்திய நெகிழ்ச்சி சம்பவமும் நடந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மீண்டும் நடிக்க துவங்கினார் திவ்யா. இந்நிலையில் 500 எபிசோட்களை கடந்த இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டது. மிகவும் ஆர்வத்துடன் இந்த சீரியலை கண்டு களித்து வந்த ரசிகர்கள் இதனால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர்.
1000 எபிசோட்களை தாண்டும்: இந்த சீரியல் தற்போது 500 எபிசோட்களை தாண்டிய நிலையில், விரைவில் அதிரடி திருப்பங்களுடன் மக்களை அதிகமாக கவரும்வகையில் வரவுள்ளதாக சீரியல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சீரியல் 1000 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்ட தகவல்கள் உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை பார்க்க தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











