தயவு செய்து இந்த இடத்தில் மட்டும் விட்டுவிடாதீர்கள்.. கையெடுத்து கும்பிட்டு கதறிய ஷகிலா!

சென்னை: இதுவரைக்கும் ஷகிலா என்னும் பெயரை சொன்னாலே வேற மாதிரி கண்ணோட்டத்தில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது ஷகிலா கண்ணீரோடு பேசிய வீடியோவை பார்த்து கண் கலங்கி வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. பல பேர் சீரியலை வெறுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மட்டும் தான் தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது .

இந்த நிகழ்ச்சி மூலமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சேர்ந்து இருந்து ஜாலியாக இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பல கண்டஸ்டன்ட் லைஃப் மாறிவிட்டது .அதிலும் ஷகிலாவின் டோட்டல் இமேஜும் மாறிவிட்டது.

பெயரைச் சொன்னதுமே அதிருதுல்ல

பெயரைச் சொன்னதுமே அதிருதுல்ல

ஷகிலா என்னும் பெயரைச் சொன்னதுமே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அவர் நடித்த பிட்டு படங்கள் தான் .அவர் அந்த படத்தில் நடித்து இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ச்சியால் கட்டி இழுத்து வைத்திருந்தவர். அதனால்தான் இவரது பெயரை வைத்து கூட பல திரைப்படங்களில் கலாய்த்து வந்தனர். இவர் சில திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து இருந்தாலும் அந்த காட்சிகள் கூட வேற லெவல் ஹிட்டாகிவிட்டது.

குக்கு வித் ஷகீலா

குக்கு வித் ஷகீலா

தற்போது இவருக்கு குக் வித் கோமாளி என்னும் நிகழ்ச்சியில் நடித்துக் கொண்டிருப்பதால் கேரக்டர் அப்படியே ரசிகர்கள் மனதில் மாறிவிட்டது. இதுவரைக்கும் இவரை பார்த்து வந்த கண்ணோட்டம் மாறி தற்போது இவரை பலருக்கும் பிடித்த கன்டஸ்ட்ண்டாக மாறிவிட்டார் .இந்த நிகழ்ச்சியில் இவரும் புகழும் ஜோடியாக பர்பாமன்ஸ் பண்ணும் போது பல பேருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது .

மக்கள் மனசுல ஷகீலா

மக்கள் மனசுல ஷகீலா

அதனால் மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து பண்ணினால் நல்லா இருக்கும் என்று கூறுமளவிற்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதுவும் புகழ் இவரை அம்மா என்று அழைத்து செட்டில் செய்யும் சேட்டைகளை யாரும் மறக்க முடியாது அந்த அளவிற்கு ஜாலியாக பெர்பாமன்ஸ் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். இவர் அவருடைய அம்மாவின் மீது எவ்வளவு பாசமாக இருந்தார் என்று இந்த நிகழ்ச்சியில் பலமுறை கூறியிருக்கிறார்.

முதியோர் இல்லம்

முதியோர் இல்லம்

அதுவும் போதாதென்று தற்போது எனக்கு எனது தாய் மட்டும் அல்ல வயதாகி கஷ்டப்படுபவர்களை பார்த்தாலே மனதிற்கு அந்த அளவிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். ஆனால் தற்போது ஒரு முதியோர் இல்லத்தில் இவர் அமர்ந்திருந்து அங்கு ஒரு வீடியோ எடுத்து இருக்கிறார் .அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடவும் அவருடைய ரசிகர்கள் கமெண்டுகளை கொட்டி வருகின்றனர் .

வேற லெவல்

வேற லெவல்

இது வரைக்கும் வேற மாதிரி இவரை பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது கருணையின் வடிவமாக இவர் பேசுவதை பார்த்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். முதியோர் இல்லத்திற்கு தயவுசெய்து யாரையும் அனுப்பி விடாதீர்கள். அதுவும் உங்களது பெற்றோரை நீங்களே அனுப்பி விடாதீர்கள். அதிலும் சிலர் யாரும் அனுப்பவில்லை நாங்கள் இங்கே வந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்கள்.

கண்ணீர்

கண்ணீர்

அதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எந்த அளவிற்கு அவர்கள் கஷ்டத்தை அனுபவித்து இருந்தால் இந்த இடத்தை தேடி வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது. அதனால் தயவு செய்து யாரையும் வயதான காலத்தில் இப்படி பண்ணாதீர்கள் என்று அவருடைய ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் .

உருக்கம்

உருக்கம்

மேலும் நான் இதுவரைக்கும் யாரிடமும் கையெடுத்து கும்பிட்டு கிடையாது ஆனால் தற்போது உங்கள் அனைவரிடமும் கையெடுத்து கும்பிடுறேன் என்று கண்ணீர் மல்க அவர் பேசியது தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது இவரின் இந்த மாதிரி வீடியோக்களுக்கு ரசிகர்களும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X