போங்க பாஸ்.. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷகீலா மகளே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம்!
சென்னை; நாளை பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில், இன்னமும் போட்டியாளர்கள் குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பதே இந்த சீசனுக்கு ஒரு பெரிய பிளஸ் தான்.
ஏகப்பட்ட பிரபலங்கள் பெயர்கள் அடிபட்டாலும், அதில் எந்தளவுக்கு உண்மை என்பது நாளை தான் உறுதியாகும் என கூறப்படுகிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷகீலாவின் மகள் மிலாவே பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்கிற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் முதல் நான்கு சீசன்களையும் தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசனே இந்த 5வது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

உத்தேச பட்டியல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவங்க தான் கன்ஃபார்மா கலந்துக்க போறாங்கன்னு ஏகப்பட்ட உத்தேச பட்டியல் வெளியாகி வைரலாகி வருகின்றன. கன்ஃபார்னு சொன்ன பல போட்டியாளர்கள் ஒவ்வொருவராக கழண்டு கொண்டு வருவதையும் வழக்கம் போல கண்கூடாக இந்த சீசனில் காண முடிகிறது.

ஷகீலா மகள் இல்லை
கன்ஃபார் போட்டியாளர்கள் என கருதப்பட்ட நடிகை ஷகீலாவின் மகள் மிலாவே தற்போது பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும், எல்லாம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவே கிளப்பி விடப்பட்ட வதந்திகள் என்கிற தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

லீக்கான புகைப்படம்
பிக் பாஸ் போட்டியாளர்கள் ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியான அந்த புகைப்படமும் பர்த்டே பார்ட்டியின் போது எடுத்த புகைப்படம் தான் என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.

வீடு பார்க்க
பிக் பாஸ் வீட்டை பத்திரிகையாளர்கள் நேரில் வந்து பார்க்க நேற்று அனுமதிக்கப்பட்டனர். பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்களையும் பத்திரிகையாளர்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் எடுத்துக் கொள்ளவும் அந்த புகைப்படங்களை நிகழ்ச்சி தொடங்கும் போது பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்கு போன மிலா
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் சார்பாக ஷகீலாவின் மகள் மிலா நேற்று பிக் பாஸ் வீட்டிற்கு சென்றார் என சமூக வலைதளங்களில் சிலர் தகவல்களை ஷேர் செய்துள்ளனர். அப்படியானால் அவர் எப்படி பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொள்வார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதுதான் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதற்கான அர்த்தமோ?


Click it and Unblock the Notifications











