விஜய் டிவி மேல தான் தப்பு.. வாட்டர்மெலன் திவாகர் ஒரு ஆளா.. மாகாபா, புகழுக்கு ஆதரவாக களமிறங்கிய ஷகிலா

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படப்பிடிப்புக்கு வந்த வாட்டர் மிலன் திவாகர், மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் தன்னை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திவாகர், படப்பிடிப்புத் தளத்தில் மாகாபா ஆனந்த் மது அருந்திவிட்டு தான் நிகழ்ச்சியை தொகுத்து வாங்குகிறார் என்றும், புகழ் மற்றும் கானா வினோத்திற்கு நான் வளர்ந்து வருவது பிடிக்கவில்லை, தன்னை தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்தில் மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் ஆகிய மூவர் மீது புகார் கொடுத்தார்.

cook with comali Vijay tv

மகாபா பதில்: இந்த விவகாரம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளான நிலையில், இதுகுறித்து விளக்கம் கொடுப்பதற்காக காவல்நிலையம் வந்த மாகாபா ஆனந்த், புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவாகர், அவர் அங்கிருந்த பெண்களிடம் வரம்பு மீறி பேசினார். இதனால், பிரச்சனை ஏற்பட்டதால், விஜய் டிவி நிர்வாகம் அவரை நிகழ்ச்சியில் இருந்து தூக்கிவிட்டது. அதற்கு காரணம் நாங்க என நினைத்துக்கொண்டு இப்படிப்பட்ட வேலைகளை செய்து வருகிறார். அவருக்கு எப்படியாவது பிரபலமாக வேண்டும் அதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை செய்கிறார் என்றனர்.

விஜய் டிவி மேல தப்பு: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த ஷகிலாவிடம் இந்த பிரச்சனை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது பேசிய ஷகிலா, நான் புகழுக்கு போன் செய்து என்னடா பிரச்சனை, அவனை எல்லாம் எதற்கு நிகழ்ச்சியில் சேத்தீங்க என்று கேட்டேன். அப்போது, புகழ் இது எல்லாம் விஜய் டிவி செய்யுல வேலை என்று சொன்னார். இந்த விஷயத்தில் நாம் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. பெரிய ஆளாக வேண்டும் என்பதற்காக எதை எதையோ பேசிக்கொண்டு இருக்கிறார். அவரை கண்டுக்காமல் விட்டு விட்டாலே பிரச்சனை இல்லை என ஷகிலா பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X