Super sister programme: அம்மா சாப்பாடு ரெடி பண்ணி குடுத்துடறாங்க என் நடிப்பை பார்க்கறாங்க!
சென்னை: சன் டிவியின் சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சி விளையாடறவங்களுக்கு செம ஜாலியாப் போகுது.
அம்மி, ஆட்டுக்கல் குடுத்து மசாலா அரைக்க வச்சு சமையல் போட்டி வச்சு, அக்கா அல்லது தங்கை சமைச்சதை சாப்பிட்டு பார்த்து சரியா இது சகோதரி செய்ததுதான்னு சொன்னால் மார்க்.
சகோதரிகள் சமைச்சதும், சகோதர சகோதரர்கள் சாப்பிட்டு பார்த்து ருசிச்சதும் நல்லா இருந்துச்சு.

அம்மா சமையல்
முதல் நாளன்று ஷாம்லி சொல்லி இருந்தார்... அவ ஆஃபீஸ் போகணும்னா அவளுக்கு சாப்பாடு செய்து டேபிள்ல கரெக்ட்டா வச்சுருவாங்க. அவ சாப்பிட்டு எடுத்துட்டு போயிருவா. என்னை ஒரு நாள்கூட எங்க சாப்பிடுவே, இல்லை நான் கட்டித் தரட்டுமான்னு கேட்டதே இல்லைன்னு சொல்லிட்டு அழுதார். ஆனால், ஷாம்லியின் இந்த குறையை கேட்ட பின் தாய் மனம் எப்படித் துடிச்சு போகும்.?

ஸ்வேதாவின் தம்பி
இப்போதெல்லாம் அம்மா சாப்பாடு கட்டி ரெடியா டேபிள் மேல் வச்சுடறாங்களாம். இது நல்ல மாற்றம்தானே... இங்கே இருக்கும் பெண்களில் யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சந்திரலேகா சீரியலில் நடிக்கும் ஸ்வேதாவின் தம்பியிடம் கேட்ட போது.. சங்கீதா அக்காவைப் பிடிக்கும்னு சொன்னார். அவங்க திரிஷா மாதிரி இருக்காங்கன்னும் சொன்னார்.

மருமகள் பூர்ணா
இது திரிஷாவுக்கு தெரியுமான்னு கேட்டபோது, அவங்க அக்கா ஸ்வேதாவை மட்டும் சின்னத்திரை ஹன்சிகான்னு ஏத்துக்கறீங்க.. பாவம் பையன் சொல்லிட்டு போகட்டும் விடுங்கன்னு சொன்னார் சங்கீதா. இவர்தான் அழகு சீரியலில் அழகம்மையின் சின்ன மருமகள் பூர்ணாவாக நடிப்பவர். பூர்ணா நிறைய நகைச்சுவை உணர்வுடன் கவுண்டர் கொடுக்கும் போது நல்லாருக்கு.

எலிமினேஷன் உண்டு
சூப்பர் சிஸ்டர் நிகழ்ச்சியை ஒரு ஜாலிக்காக நடத்தினாலும், இதிலும் முழுத் திறமைகள் பளிச்சிடும்படி நிறைய போட்டிகள் வைத்து, எலிமினேஷன் வைக்கிறார்கள். இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்து, சாப்பிட்டு விளையாடிய இவர்களுக்குள் ஆழமான நட்பு வந்துருது.. சீரியலில் நடிப்பவர்களுடன் சேர்ந்து அவர்களுடன் கூட பிறந்தவர்களும் இந்த நிகழ்ச்சியில் பிரபலமாகி வருவது வரவேற்கத் தக்கது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் .


Click it and Unblock the Notifications











